vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, October 12, 2017

CROW IS WALKING

CROW   IS WALKING

Grace  Butcher


 To see the things in ground level
The landscape as new under his feet
 As  the  air  is  old  under  his  wings

He   leaves  the  dead  rabbit  waiting –
It’s a given; It is always there –
Walks on   down the dirt road
Admires   the  pebbles
How they sparkle in the Sun—
Checks out his reflection
In a puddle full   of   sky
Which   reminds  him
Of   where  is he  is  supposed  to  be
But   he  is beginning  to  like
The   way his muscles move in  his  legs
And   the  way  his wings  feel  so  comfortable
Folded   back  resting

He   thinks  he  might  be  beautiful
The   Sun  lighting  his  back
With   purple  and  green
Faint   voices from  some  where   far  ahead
Roll   like  dust  down  the  road  towards  him
He   hurries  a  little
His   tongue  moves  in  his  mouth
Legends   of   language move   in  his  mind

His  beak  opens
He  tries  a  Word
      

               [ மொழி பெயர்ப்பு ]  வைதீஸ்வரன்

 பரிணாமம்
------------------------------------------------------

நடந்து  நிலத்தைப் பார்க்க வேண்டுமென்று
காக்கை  நடக்கிறது.
இறக்கைக்குள்  இருக்கும் பழங்காற்றுக்கு  ஈடாக
புதிதாகப் படுகிறது  கால்களுக்கடியில் நிலம்.
கிடக்கும் அந்த செத்த முயல் கிடக்கட்டும்....
அது எப்போதும் கிடைக்கும்.
மேலும் நடக்கிறது காகம்
சரளைக் கற்கள் எவ்வளவு  மெதுவு.
வெய்யிலில் வைரக் கற்கள்....
ஆகாயம் நிறைந்த  நீர்க்குட்டையில்
எப்படித்  தெரிகிறது  பிம்பம் !!
தான் இருக்க வேண்டிய உயரம்
ஞாபகத்துக்கு வருகிறது---
ஆனாலும்
தசைகள் பருத்து இயங்கும்
அதன் கால்களின் அழுத்தம்
அதற்கு  சுகமாக  இருக்கிறது..
மேலும் முதுகில் அடக்கமாய் மடிந்து கிடக்கும்
 சிறகுகளின்  அமைதியை அது  ரஸிக்கிறது.
கருநீலமும் பச்சையுமாய்
வெய்யிலில் மின்னுகிறது
அதன் மேனி
தான் அழகென்று ஒர் எண்ணம்
அதற்குள். பூரிக்கிறது
புரண்டு வரும் சருகுகளாக
அதை நோக்கி  வருகிறது
தூரத்தில் சில குரல்கள்
காக்கையின் நடை வேகமாகிறது.
நாக்குப் புரளுகிறது அதன் வாய்க்குள்.
மொழியின் தொன்மையான சாயல்கள்
ஊறுகிறது  மனத்துக்குள்.
அகல விரிகிறது  அதன் அலகு
அதற்குள்  புரண்டு திரண்டு
வருகிறது  ஒரு  வார்த்தை.
         ***********************            
                                  Grace  Butcher


      


No comments:

Post a Comment