vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, February 7, 2018

ஓலையும் மாலையும்

ஓலையும் மாலையும்
வைதீஸ்வரன்
(அம்ருதா பிப்ரவரி)

  ங்கள் ஆபீஸில் அஸிஸ்டெண்ட் சீதாராமன் வந்ததிலிருந்து பரபரப்பாக மணியைப் பார்த்துக் கொண்டு அலைந்து கொண்டி ருந்தானானால் அன்று சனிக்கிழமை என்று நிச்சயமாக சொல்லி விடலாம்அன்று அவன் கையில் கசங்கிப்போன பழுப்புக் கையேடு ஒன்று இருக்கும்முனை மழுங்கிய பென்ஸில் இருக்கும்வாயில் சில பெயர்கள் வந்து மறைந்து போய்க் கொண்டிருக்கும்...

“என்ன சீதாராமன் ஸார்.... இன்னிக்கு எப்படி ஓடப்போவுது?” என்று பொதுவாகக் கேட்டுவைப்போம். அவர் வாயைக் கிளறுவதற்காகத்தான்.


“ இன்னிக்கு உள்ளூர் கழுதையெல்லாம்  ஓடாதுங்க... பெங்களூர்லேருந்து ராயல் கிங்க் வந்திருக்குவெயிட் கம்மிபரவால்லே.ஜகர்நாட்டு ஜான்ஸி ராணி கலகத்தாவுலே அடிச்சுருக்குஎனக்கென்னவோ எரால் ப்ளின் தான் வரும்னு நெனைக்கிறேன்ஜாக்கி ரொம்ப கில்லாடி...” என்று ஆர்வத்தோடு பேசுவான்பேசிக் கொண்டே இருப்பார்.

வயதானாலும் அவன் இவன் என்று கூப்பிட்டே பழகி விட்டோம்.. இப்போது அவன் வேலையில் இருப்பதை அவனுக்கு ஞாபகப் படுத்தி ஆக வேண்டும்.

“ ஏம்ப்பா.... நேத்தே அந்த ஆபீஸர் சத்தம் போட்டாரே......பைலட்டுகள் sick ரிப்போர்ட்டு லிஸ்ட் கேட்டாரே...நேத்து மேனேஜர்! .....குடுத்தாச்சா? “ என்று பேச்சை மாற்றிக் கேட்பேன்.

அவன் கடக்கறான்முப்பது வருஷமா இங்கே ஓடா ஒழைச்சாச்சு..இன்னும் எனக்கு விடிவு இல்லேஒரு ஜேக் பாட் அடிச்சுட்டேன்னா.....மயி......ச்சுன்னு தூக்கிப் போட்டுட்டு போயிக்கினே இருப்பேன்இன்னிக்கு அடிச்சுடறேன்!...இன்னிக்கு அடிச்சுடறேன்...”” என்று வாயில் துண்டாகித் தொங்கும் சிகரட்டை உதறிக் கொண்டே நகருவான்..

பியூன் வருவான். "...சீதாராமன் ஸார்... உங்களை மேனேஜர் கூப்பிடறார்..” என்பான். உடனே சீதாராமன் என்னைப் பார்த்துக் கண்ணடிப்பான்ஞாபகமாக அந்தக் கசங்கிய பழுப்புப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு உள்ளே போவான்.

ஒரு பொதுவான பழக்கத்தில் தீவிரமான ஆர்வம் தொத்திக்கொண்டுவிட்டால் தொத்திக் கொண்ட வர்களுக்கு இடையில் தாரதம்மியங்கள் இல்லாமல் போய் விடுகின்றன......  முக்கியமாக இந்த விதமான  கெட்ட]  பழக்கங்களில்!..........குடிகாரர்கள்... பாலியல் சபலமுள்ளவர்கள்....குதிரைப் பந்தய பித்தர்கள்.எல்லோருக்கும் இடையில் எப்போதும் ஒரு சஜமான ஒட்டுறவு!!…

.கோடீஸ்வரனும் குடிசை வாரியத்தில் இருப்பவனும் கூடிக் கூடிப் பேசிக்கொள்வார்கள் உயர் அதிகாரியும் சாதாரண கீழ் நிலை குமாஸ்தாவும் குலாவிக்கொண்டு ரகஸியங்களைப் பரிமாறிக்கொள்வார்கள்ஆனாலும் வினோதமாக இத்தகைய சிநேசிதங்கள் அவரவர் அந்தஸ்தை சமூக இடை வெளியை எப்போதும் மாற்றி விடுவதில்லை.!!

சீதாராமன் சிரித்துக் கொண்டே வெளியே வருவான்.

“ அவனுக்கு டிப்ஸ் வேணுமாம்.... எங்கிட்டே தொங்கறான்! “

“ குடுத்தியா? “ என்று கேட்டேன்.

“ என்னா செய்யறதுமேனேஜர் கேக்கறான்.!....”

“ அது ஜெயிக்குமா?...”

“ அது நிச்சயமா தெரிஞ்சா....நான் ஏன் இந்த கொடங்குலே ஒக்காந்துருக்கேன்!.. எல்லாம் எழுதி இருக்கணும்!..” என்று விரலால் நெற்றியில் கோடு போட்டுக் கொள்வான்.

சீதாராமனைப் பார்க்கும் போது எனக்கு வெறுப்பாக இருக்காதுஅவனை அனுதாபமாகத் தான் பார்க்கத் தோன்றும்இவ்வளவு வருஷங்களில் அவன் குதிரைப் பந்தயத்தில் இழந்த பணத்தில் நிலம் வாங்கி இருக்கலாம்புறநகர்ப் பகுதியில் வீடு வாங்கி இருக்கலாம்.  குழந்தைகளை நல்ல பள்ளிக் கூடங்களில் சேர்த்திருக்கலாம்நல்ல வைத்தியம் பார்த்து அப்பா இன்னும் சில வருஷங்கள் உயிரோடு இருந்திருக்கலாம்.....

எங்களுக்கு மாதத்தின் கடைசி தேதியில் தவறாமல் சம்பளம் கொடுத்து விடுவார்கள்அந்தக் கடைசி தேதி சீதாராமனின் மனைவிக்கும் ஏர்ப்போர்ட்டு பக்கத்தில் கடை போட்டிருந்த லேவா தேவிக்காரனுக்கும் நன்றாக ஞாபகம் இருக்கும்மதியம் ஒரு மணிக்கு எல்லோரும் சீதாராமனைத் தேடி வந்து விடுவாகள்அன்று மாலைக்குள் சீதாராமன் சம்பளக் கவரை தூக்கி எறிந்தாலும் நஷ்டம் ஒன்றும் பெரியதாக இருக்காது!..

ஆனாலும்இவனுக்கு இன்னும் குதிரையில் தன் எதிர்காலத்தில் தன் சாதுரியத்தில் நம்பிக்கை மாறி விடவில்லைஒரு வேளை யாராவது மந்திரம் போட்டு அவனை இந்தப் பழக்கத்திலிருந்து விடுவித்து விட்டால் அடுத்த நிமிஷமே அவர் உயிரை விட்டு விடலாம் என்று தோன்றியது....
எப்படியோ சீதாராமன் ஒரு நல்ல விமானக் கம்பனியில் முப்பது வருஷங்கள் ஓட்டி விட்டான்ஒரு முறை கூட ஜேக் பாட் அடிக்கவில்லைஅவ்வப்போது இவனை மேலும் தூண்டி இழுப்பது போல் போட்ட காசு திரும்பி வந்து கொண்டிருந்ததுஅது தான் அவனுக்கு நேர்ந்த ஆபத்தான அதிர்ஷ்டம் என்று எண்ணிக் கொள்வேன்!.

நாளை முதல் அவனுக்கு வேலையிலிருந்து ஓய்வு!. பிறகு முழு நேர சூதாட்டமும் சாத்தியப் படுமென்று சொல்ல முடியாது.

சீதாராமன் வருத்தமுடன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

“ சீதாராமா....எல்லாருக்கும் இப்படி ஒரு நாள் வரப் போற சம்பவம் தானேநாலு வருஷத்துலே நானும் கூட ரிடையர் ஆகப் போறேன்.!..கவலைப் படாதே! தைரியமா இரு..” என்றேன்.

அவன் கண்கள் சற்று ஈரமாக இருந்ததுகைகுட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டான். கைப் பையிலிருந்து அந்த பழுப்புக் கையேட்டை மீண்டும் வெளியே எடுத்தான்..

“ சீதாராமா...என்னா இதுஇப்பவாவது நிறுத்த மாட்டியா? “ என்று சற்று கோபமாக பேசினேன்.

“ இல்லெப்பா....நாளைக்கு தான் நான் கடைசியா விளையாடப் போறேன்ஸ்பெஷல் ரேஸ் விடறாங்க!..நாளைக்கு அடிச்சுடுவேன்!” என்றான்..

அப்போது டெல்லி விமானம் தரை இறங்கிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது.ம் எனக்கு ஞாபகம் வந்தது.

“ சீதாராமா!.....டெல்லி ப்ளைட் இறங்கியாச்சுகேப்டன் ராஜேஷ் வராருநாளைக்கு அவருக்கு  261 கலகத்தா ப்ளைட்வந்தவுடனே இதா இந்த ரோஸ்டர் காகிதம் அவருக்குக் கொடுக்கணும்ஞாபகம் வைச்சுக்கோ!” என்றேன்.

“ யாரு ராஜேஷ்..வரானா?.... அவங் கூட பேச வேண்டியிருக்குநான் போயி அவனைப் பாத்து ரோஸ்டர் காயிதத்தைக் கொடுத்துட்டு ரெண்டு விஷயம் பேசணும்.. பேசிட்டு வந்திட றேன்...குடு... குடு...” என்று அவசரப் படுத்தினான்ரோஸ்டர் காகிதத்தை இடது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அந்த சின்னப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வெளியே போனான்திரும்பி எட்டிப் பார்த்து அப்படியே வீட்டுக்குப் போறேம்பா!..” என்றான்.

All tha Best ...நாளைக்கு உனக்கு farewell பார்ட்டி மறக்காதே!..என்று வேகமாக சொல்லி அனுப்பினேன்.


மறு நாள் சீதாராமன் மேடையில் மாலையும் கழுத்துமாக நாற்காலியில் உட்காந்திருந் தான்கூடி ஊழியர்கள் பத்துப் பேர் அதிக ஒட்டுதலில்லாமல் உட்கார்ந்திருந்தார்கள்.  

மேனேஜர் "” சீதாராமன் 34 வருஷங்களாக அயராமல் கம்பனிக்காக உழைத்த உழைப்பை பாராட்டி அவருடை இழப்பு நமக்கெல்லாம் ஒரு இழப்பு என்று சொல்லி கையை சற்று லகானைப் போல் இழுத்து தனக்குள் சிரித்துக் கொண்டு உட்கார்ந்தார்... அடுத்தது சீதாராமன் இரண்டு வார்த்தை பேச வேண்டும்.

அப்போது அவசரமாக ட்யூட்டியிலிருந்த ஒரு ஊழியன் ஓடிவந்தான்.அவன் முகத்தில் கலவரம் தெரிந்தது.. மேடையிலிருந்த மேனேஜரை அவசரமாக அணுகி காதோடு சொன்னான்.

“ கல்கத்தா போக வேண்டிய விமானம் ஓட்ட வேண்டிய பைலட் ராஜேஷ் வரவில்லைஅவர் வீட்டில் இல்லையாம். அவருக்கு இந்த தகவல் பற்றி யாரும் நேற்று சொல்ல வில்லையாம்...”

“ அய்யய்யோ!!.... நேற்று சீதாராமன் ராஜேஷைப் பார்க்கப்போனபோது இந்த முக்கியமான ஆபீஸ் தகவலை அவருக்கு கொடுக்க மறந்து போயிருக்கிறான்.”நான் மேனேஜரிடம் ஓடிப் போய் விவரத்தை சொன்னேன்மேனேஜர் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சீதாராமன் ஏற்புரை பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுப் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் வேறு ஒரு மாற்று விமானியை அவசரமாக ஏற்பாடு செய்து கல்கத்தா விமானத்தை அனுப்பி வைத்தோம்விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியதுஇந்தத் தாமதத்துக்கு நாங்கள் பொறுப்பேற்று எங்கள் நிர்வாக அதிகாரிக்கு மன்னிப்புக் கடிதம் எழுத வேண்டியிருக்கும்!!.

மாலையும் கழுத்துமாக பொன்னாடையுடன் எங்கள் கம்பனி காரில் தழுதழுத்து விடை பெற்று சென்ற சீதாராமனைப் பார்த்து யாருமே சிரிக்கவில்லைஅவன் அப்பழுக்கற்றவனாக வேலையிலிருந்து ஓய்வு பெற்றான்.

பைலட் ராஜேஷுக்கு ஜேக் பாட் அடித்ததாக வதந்தி உலவிக் கொண்டிருந்தது.



Ø  

No comments:

Post a Comment