vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, May 12, 2018

சில கட்டுரைகள்....ஒரு நேர்காணல் வைதீஸ்வரன் [குவிகம் பதிப்பகம் ] மதிப்புரை:

சில கட்டுரைகள்....ஒரு நேர்காணல்

வைதீஸ்வரன்
[குவிகம் பதிப்பக வெளியீடு ]
மதிப்புரை:
இந்திராபார்த்தசாரதி(28 4 2018)

எனக்கு புதுக்கவிதை என்ற சொல்
லாட்சி பிடிக்கவில்லைகவிதை 
கவிதை அல்லாதது என்ற பாகு
பாட்டைத் தவிர வேறு எந்த அடை
யாளமும் பொருந்தவில்லை.

புதுக் கவிதை என்று வடிவத்தை 
வைத்து சொல்லுகிறார்கள். “புது "  என்றவுடன் அதற்குக் கால 
வரையறை உண்டு என்று நினை
வில்இருத்திக்கொள்ள வேண்டும். 

எதுகை மோனை எதுவுவுமே
யின்றி கருத்து பலத்தையே 
ஆதாரமாகக்கொண்டு அந்தக் 
காலத்தில் "செந்தொடைப்பாக்
களும் இருந்திருக்கின்றன.

வடிவத்துக்குக் கால வரையறை 
உண்டே தவிர கருத்துக்குக் 
கிடையாது

ஏழு சீர்களை வைத்துக் கொண்டு 
ஒரு புதிய பிரபஞ்சத்தையே 
வள்ளுவர் சிருஷ்டித்த போது அது 
அந்தக் காலத்தில் புதுக் கவிதை என்று அழைக்கப் 
பட்டதா என்று நமக்குத் தெரியாது
யாப்பிலக்கண வரையறையில் 
அது குறள் வெண்பாவாகி
விட்டது!!

நண்பர் கவிஞர் வைத்தீஸ்வரன் 
அண்மையில் வெளியாகி 
இருக்கும் அவர் புத்தகத்தை 
னக்கு படிக்கத் தந்த போது எனக்குத் தோன்றிய கருத்துக்கள் 
இவை.

இது அவர் கவிதை புத்தகமில்லை. “ சில கட்டுரைகள் ..ஒரு நேர்காணல்..” {குவிகம் வெளியீடுஅவர் வெவ்வேறு சமயங்களில் இலக்கியக் கூட்
டங்களில் கலந்துகொண்டபோது கவிதை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட சிந்தனைகள் மிக இயல்பாக பாசாங்குத்தனம் ஏதுமின்றிக் கூறப்பட்ட கருத்துக்கள்.

அவர் முதல் கவிதை "கிணற்றில் விழுந்த நிலவுஎழுத்து வில்{இப்படி எழுதியிராவிட்டால் செல்லப்பா என்னை மன்னிக்க மாட்டார்.} வந்த 
போது தம் மரபை மீறிப் புதுக் கவிதை எழுதுகின்றார் என்று அவருக்குத் தெரியாது. எங்கிறார்அவரால் அப்படித் தான் எழுதி இருக்க முடியுமென்
றும் மரபை மீற வேண்டும் என்ற கோட்பாடு எதுவும் கிடையாது என்றும் சொல்லுகிறார்.

“I sing but as Linnets Sing.. என்கிற  Tennyson வரிகள் நினைவுக்கு வந்தன.

“ உலகம் நம்மால் அழியாமல் இருக்கட்டும்.” என்பதுதான் அவர் படைப்பு 
களின் உயர்ந்த பட்சக் குறிக்கோள்.

அவருடைய ஓவியத் திறனும் இயல்பாகத் தன்னை அறிவித்துக்கொண்ட 
ஒரு ஆற்றல்சொல்லப் போனால் ஓவியமும் கலைவடிவமும் ஒன்றுக்
கொன்று மிக நெருங்கிய பந்து உறவு]

நல்ல கவிதை என்பது காற்றைப் பிடிப்பது போல....பிடித்துவிட்டால் காற் றில்லை....எனறு ஒரு கருத்தும் உண்டுஅதாவது புரிந்து விடக்கூடாதென்ற அர்த்தம்இது மேட்டிமைத்தனமான கருத்து.

படிக்கப் படிக்க பொருள் காலத்துக்குக் காலம் விரிந்துகொண்டேபோவது
தான் உண்மையான கவிதை




No comments:

Post a Comment