நாடகக் கலைக்கு ஒரு நந்தா விளக்கு
[திரு எஸ். வி. ஸஹஸ்ரநாமம் அவர்களின்
நூற்றாண்டு விழா கட்டுரை]
----------வைதீஸ்வரன்
கட்டுரை ஆசிரியர்-தமிழின் முன்னோடிக்கவிஞர்களில் ஒருவர். ஸஹஸ்ரநாமத்தின் சகோதரி மகன். --------நன்றி தி இந்து- 6- 12- 2013
“எல்லாம் அவன் தலையெழுத்துப் போலாகட்டும்!“
என்றார் ஸஹஸ்ரநாமத்தின் அப்பா. அப்போது சிறுவன் ஸஹஸ்ரநாமத்துக்கு
வயது பத்து இருக்கும். மதுரைஸ்ரீ பாலஷண்முகானந் த சபா மேனேஜர் காமேஸ்வரஅய்யரிடம்ஸஹஸ்ரநாமத்தின்
அப்பா கோபமாக சொன்ன வார்த்தை இது!!
ஏனென்றால் பையன் வீட்டை விட்டு
ஓடிப் போய் அப்பாவின் பொய்க்
கையெழுத்தைப் போட்டு. “சம்மதம்“ என்று கடித்ததை கொடுத்து நாடகக்
கம்பனியில் சேர்ந்து விட் டான் காமேஸ்வர அய்யர் இதைக் கண்டுபிடித்து
அவன் அப்பாவை
கூட்டிக் கொண்டு வந்து பையன் நிற்க வைத்து“இப்படிப்
பட்ட பையனை நாங்கள் நாடகத்துலே
சேர்த்துக் கொள்ளலாமா? என்று கேட்ட
துக்கு
அப்பா மேற்கண்டவாறு மகனை ஆசீர்வதித்தார்.
ஸஹஸ்ரநாமம் 29-11-1913ல் கோயம்புத்தூரை அடுத்த சிங்காநல்லூரில்
பிறந்தவர். சின்ன
வயதிலேயே தாய் முகம் அறியாதவர். வறிய பெரிய குடும் பம். வீட்டுக் கஷ்டத்தி னால் சித்தப்பா வின் பலகாரக் கடையில் வேலை செய்யஅனுப்பப் பட்டிருக்கிறார். தற்செயலாக உள்ளூரில் பாய்ஸ்கம்பனி
நாடகம் ஒன்றைப் பார்த்த போது குடும்ப நெருக்கடி யிலிருந்து தப்பித்
துப்போய் சுதந்திரமாக ஆடிப்பாடி நடிக்கும் வாழ்க்கையில் விடுதலையும்
சந்தோஷமும் கிடைக்குமென்று அவனுக்குள் ஒரு ஆசை முளைத்துவிட்டது. சேர்ந்து விட்டான்.
எஸ்.வி. ஸஹஸ்ரநாமம் அவர்கள் நாடகக்கலையில் தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகளின் வழியில்
வந்தவர். ஆரம்ப காலம் தொட்டே டி.கே.எஸ் எஸ்.
சகோதரர் கள் என்.எஸ்.கிருஷ்ணன் இவர்களுடன் ஒன்றாக வளர்ந்து பல வருஷங்கள் நாடகக் குழுவில் பல பாத்திரங்களிலும் பல துறைகளிலும் பங்கேற்று பழுத்த அனுபவம் பெற் றவர். இவர்களுக்கிடையில் நெருங்கிய
பாசமும் நட்பும் ஆயுள் முழுவதும் தொடர்ந்து வந்திருக்கிறது...
அந்தக் காலத்தில் பாய்ஸ்
கம்பனிகள் அரசாங்கக்கெடுபிடிகளுக்கு
பயப் படாமல் இந்தியாவின்
சுதந்திரப் போராட்ட உணர்வுகளைப் பிரதி
பலிக்கும் நாடகங்களை நிகழ்த்தி மக்களை
தேச விடுதலை போராட்டத்
துக்கு ஆவேசப் படுத்தின. வெ.சாமிநாத
சர்மா எழுதிய. “பாணபுரத்து வீரன்“
என்ற ஆங்கிலத் தழுவல் நாவலை எழுதியிருந்தார். அது தேசீய விடுதலை
எழுச்சியை பூடகமாக தூண்டும் விதமாக இருந்தது. அதை
பாரதியார்
பாடல்களையும் சேர்த்து நாடகமாக உரையாடல்களை எழுதியவர்
பாஸ்கரதாஸ் அவர்கள்.
அதில் ஸஹஸ்ரநாம்ம் வாலீஸன் என்ற பாத்திரத்தில் நடித்தார். “நாட்டு சுதந்திரத்துக் காக நான் பாடு படுவது குற்றமென்றால் அந்தக் குற்றத்தை செய்துகொண்டுதான்
இருப்பேன்....எனக்கு உயிர் பெரி தல்ல.....” என்று ஒரு நீண்ட வசனத்தை அவர் பேசி
முடித்தவுடன் அரசன் உத்தரவின் பேரில் அவன் தூக்கிலிடப்படுவான்! . இந்த நாடக அரங்கேற்றத்துக்கு சில வாரங்கள்முன்
தான் சுதந்திர போராட்ட
வீர்ர்கள் பகத் சிங் சுகதேவ் இவர் கள் தூக்கிலிடப் பட்டார்கள் அரசன் இவரைத் தூக்கிலிட உத்தரவிட்ட தும் “ஜனங்கள்
“வாழ்க சுக்தேவ்
வாழ்க பகத்சிங் “ என்று கோஷமிடுவார்கள்.
அந்தக் காட்சியில்
பலகை மேல் இவரை நிறுத்தி வைத்து மேலிருந்து
தொங்கும் தூக்குக் கயிற்றை இவர் கழுத்தில் மாட்டி அவர் நிற்கிற பலகையை
நகர்த்தி விடுவார்கள். ஆனால் உண்மையில் அவர் கழுத்து
இறுகாம லிருக்க இன்னொரு கறுப்புக் கயிறு பின்னால்
வளையத்துடன் தொங்கும்.... வளையத்தை ஸஹஸ்ரநாமத்தின் பின்புறம் மறை வாக இடுப்பு பெல்டில் தூக்குப் போடுவதற்கு சிலகணங்களுக்கு முன்
மாட்டிவிட வேண்டும் இந்த வேலை அங்கே காவலாளியாக நடிக்கிற டி.என். சிவதாணுசெய்ய
வேண்டியது. ஒரு நாள் சிவதாணு இந்த
வேலையை செய்யத் தவறி விட்டார். ஸஹஸ்ரநாமம் உண்மையிலேயே
தூக்கில் தொங்கி உயிருக்குப்
போராடிக் கொண்டிருந்தார் முகம் ரத்த
சிவப்பாகி கால்கள் உதற ஆரம்பித்துவிட்டன. அநேகமாக இறந்து விட்டார்.
நல்ல வேளையாக ஓரத்தில்
இருந்தவர்கள் சமயத்தில் இதை
உணர்ந்துஓடிப் போய் அவரை கீழே இறக்கி முடிச்சைத் தளர்த்தியிருக்
கிறார்கள். நினைவுதிரும்பி
மூச்சு சாதாரணமாவதற்கு பல மணி நேரங்கள் ஆகியிருக்கிறது.
1945வரை ஸஹஸ்ரநாமம் நாடகங்களிலும் திரைப்படங்களிலும்
வேறு சிறு தொழில் களிலும் கூட ஜீவனத்தை
நடத்தியிருக்கிறார்.
உயிருள்ள பாம்பை
கழுத்தில் போட்டுக் கொண்டு பயத்தில் உதறாமல்
ஜதி சுத்தமாக ஆடத் துணிந்ததால் அவருக்கு அநேக மாக சிவன்
வேஷமே திரைப்படங்களில் ஒதுக்கப்
பட்டிருக்கிறது. அப்போது திருமண
மாகி தந்தையாகவும் இருந்தவர்.
அவருடைய இந்த மொத்தப் பின்புல அனுபவமும் 46க்குப் பின் ஒரு
நல்ல நாடகக்குழுவை ஏற்று நடத்துவதற்கு திறமையையும் துணிவையும் கொடுத்திருக்கிறது.கலைவாணர் என் எஸ்
கிருஷ்ணன் லட்சுமிகாந்தன்
கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகள்
சிறை சென்று மீண்டு வரும்வரை
என்.எஸ் கே நாடகசபையின் நிர்வாகியாகவும்
முக்கிய நடிகராகவும் அவர்
சென்னை ஒற்றை வாடை
தியேட்டரில் வெற்றி
கரமாக நாடகங்கள் நடத்தியிருக்கிறார்..
அவரே எழுதித் தயாரித்த ”பைத்தியக்காரன்?” என்ற நாடகம் பால்ய
விதவைகளின் கொடுமைகளையும் சமூகத்தின் நிராகரிப்புகளையும் கருவாகக் கொண்டது. தமி ழின் மூதறிஞர் பாரதியின் தோழர் திரு வ.ரா
இந்த நாடகத்தை பலமுறை பார்க்க வந்திருக்கிறார். ஸஹஸ்ரநாமத்தின்
மேல் அபார வாஞ்சையும் மதிப்பும் கொண்டு மூத்த நண்பராக பழகி
இருக்கிறார்.அதே போல் கம்யூனிஸ்ட்
தலைவர் ப.ஜீவானந்தம்
அவர்களும் ஸஹஸ்ரநாமத்தின் நாடகங்கள் சமூக மறுமலர்ச்சிக்கு
சக்தியுள்ள ஊடகமாக பயன்படுவதைக் கண்டு மெச்சிப் புகழ்ந்து
“பாரதி கலைஞர்
ஸஹஸ்ரநாமம் “ என்று ஒரு பட்டத்தை பின் னாளில் வழங்கிருக்கிறார்.
1950க்கு பிறகு திரைப்படங்களில் வாய்ப்புகள் இருந்த போதும்
ஸஹஸ்ரநாமம் சேவாஸ்டேஜ் என்கிற ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்து
தமிழ் நாடகங்களுக்குஒரு
தற்காலப்பான்மையை ஏற்றி இருக்கிறார்.
இதே கால கட்டத்தில் நல்ல சமூக நாடகங்களின் மூலம் டி.கே.எஸ்
குழுவினர் ஆற்றிய பரவலான பங்களிப்பும்நினைவில் கொள்ளத்
தக்கவை.
இக்கால கட்டத்தில் மேடை அரங்க நிர்மாணம் ஒளி அமைப்புகள்
இவற்றிலெல்லாம் ஒரு கலாபூர்வமான நூதன மாற்றத்தை பொருட்
செலவைப் பார்க்காமல்நிறுவிக் காட்டியது சேவாஸ்டேஜ் நாடக மன்றம் தான். அதேபோல் நாடகத்தில் பின்பாட்டு உத்தியை முதல் முதலாக அறிமுகப்படுத்தியதும் ஸஹஸ்ர நாமத்தின் முயற்சி தான்.
நல்ல ஆங்கில நாடகங்களை தமிழாக்கித் தந்த என்.வி.ராஜாமணியும்
பிறகு வந்த நவீன
இலக்கிய ஆசிரியர்களான பி.எஸ்.ரா மையா, தி.ஜானகிராமன், கு. அழகிரிசாமி போன்றவர்களும் நல்ல நாடகங்கள்
பலவற்றை சேவாஸ்டேஜுக்காக எழுதிக் கொடுத்தி ருக்கிறார்கள்
தொழில்முறை நாடகத்
தயாரிப்புகளில் நவீனஇலக்கிய ஆசிரியர்கள்
நாடகங்கள் எழுத முன் வந்தது முக்கியமான இரண்டு
கலைப் பிரிவுகளின் சங்கமத்தை
ஏற்படுத்தியது. இந்த நாடகங்களின்
பெருத்த வரவேற்புக்குஇன்னொரு பலமாக பராசக்தி படத்தில் நட்சத்
திரமாகிவிட்ட பின்னும்ஹஸ்ரநாமத்தின் மேலுள்ள மரியாதை யால் திருசிவாஜிகணேசன் சில ஆண்டுகள் சேவா ஸ்டேஜ் நாடகங்களில்
முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார் . ஸஹஸ்ரநாமம் முன்னின்று
நடத்திய
நாடகக் கல்வி நிலையத்தில் மாணவராக சேர்ந்த கோமல் சுவாமிநாத னும் ஒரு முக்கியமான இலக்கிய நாடக
ஆசிரியராக இதழ் ஆசிரியராக
பிரபலமானார்.
ஸஹஸ்ரநாம்ம் நல்ல முகவெட்டும் கட்டு உடலும் குரலும்
உள்ளவராக
இருந்த போதிலும் ஏனோ ஆரம்பத்திலிருந்தே அவர் கதாநாயகனாக வேஷம் போடாமல் ஆனாலும் முக்கியமான உப பாத்திரங்களிலேயே
நடித்துப் புகழ் பெற்றிருக்கிறார். அவருடைய திரைப்பட
பாத்திரங்களும்
அப்படியேதொடர்ந்தது. அதீதமாக காதல்டூயட் பாடும் வேஷங்களில்
அவர் சோபிக்கவில்லை. ஆனால், ஆழமான உணர்ச்சிகளுடன்
யதார்த்தமாக பாத்திரத்தின் தன்மையறிந்து
நடிக்கும் குணசித்திர பாகங்களில் அவர்தனித்
தன்மையுடன் மிளிர்ந்தார். அதே
மாதிரி, வழக்கமான பாணிகளிலிருந்து
வித்தியாசமான வில்லன்
வேஷங்களிலும் கூட அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அவர் சுமார்
250 படங்களுக்கு மேல்
நடித்திருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.
அதில் எ.வி.எம்மின்வாழ்க்கை, பராசக்தி, நல்லதம்பி, பைத்தியக்காரன்,
உரிமைக் குரல், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், படித்தால் மட்டும் போதுமா? மறக்க முடியுமா? முதலிய படங்களை மறக்க
முடியாது.
திரைப்படங்களை அவர்தனது வருவாய்க்குமட்டுமேஒரு ஆதாரமாக
நினைத்தார். அதே சமயம் அவர் நாடகக் கலையின் ஒட்டுமொத்தமான
வளர்ச்சியில் கருத்தாக இருந்தாரே
ஒழிய அதன் மூலம் தன்னை முன்னிலைப்
படுத்திக்கொள்ள நினைத்ததில்லை. சேவாஸ்டேஜ் நாடகங்களில் முக்கிய
மான பாத்திரங்களை ஏற்றுநடித்துஅனுபவமும் புகழும் பெற்றதால்
திரைநட்சத்திரங்களானார்கள். ஆர்.முத்துராமன்; தேவிகா எஸ்.என்.லட்சுமி. முதலியவர்கள்.
1959ல் இயல் இசை நாடக மன்றத்தின் ஆதரவுமூலம் சேவாஸ்டேஜ்
தயாரித்த கவிதை நாடகங்கள் மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதமும்
குயில் பாட் டும். இன்றும் அவைகள் தமிழ் நாடகத்துக்கு
அர்ப்பணிக்கப் பட்ட சிறப்பான கொடைகளாகக் கூறலாம்.
அறுபத்தி இரண்டில் நிகழ்ந்த சீனப் போர் சமயத்தில் தேச எல்லைப்
பாதுகாப்புநிதிக் காக நன்கொடை நாடகங்கள் நடத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் தனக்குசினிமா நாடகத் துறையில் சன்மானங்
களாக அளிக்கப்பட்ட கணிசமான தங்கம்
வெள்ளிப்பதக்கங்கள் கோப்பைகள் சங்கிலிகள் அத்தனையும்
திரு காமராஜரிடம் சென்று சமர்ப்பித்திருக்கிறார் .
விருதுகள் பற்றிப் பேசப்படும்
இன்றைய சூழலில் தமிழ் நாடகக்
கலைக்காக ஆயுள் உழைப்பு பொருள் அத்தனையும் அர்ப்பணித்த
பாரதி கலைஞர் திரு ஸஹஸ்ர நாமம் பெற்றது மத்திய அரசின்
சங்கீத நாடக அகாடமி பரிசு ஒன்று தான்.
அவர் தனது 74வது வயதில் காலமானார்.