[Paul Coelho]
தன்னை உணர்ந்து கொண்டவனுக்குத் தெரிகிறது –
எல்லா மொழிகளிலும் சிறப்பான சொல்.....
சின்னஞ்சிறு சொற்கள் தான்.
எல்லா மொழிகளிலும் சிறப்பான சொல்.....
சின்னஞ்சிறு சொற்கள் தான்.
ஆமாம்...அன்பு...அறம்..
ஆனந்தம்...
போன்றவை.
ஆனந்தம்...
போன்றவை.
மிக சுலபமாக மொழியக் கூடிய இந்த எளிய வார்த்தைகள் பரந்து விரிந்து உலக வெளியின் சூன்யத்தை அற்புதமாக நிரப்புகிறது.
ஆனாலும் இங்கே நடைமுறையில் இன்னொரு சின்ன வார்த்தை இருக்கிறது. அந்த சொல் பலருக்குத் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.. அது தான் பிறர் அவச்செயலைக் கண்டு “ தவறு “ என்று உரைப்பது.
வெளிப்படையாக அவ்விதம் சொல்லாதவன் எண்ணிக் கொள்ளுகிறான் _
தான் மிகப் பணிவுள்ளவனாக கர்வமற்றவனாக பிறர் மனதைப் புண்படுத்த விரும்பாத சாதுவான ஆத்மாவாக இருப்பதாக............
பக்குவமானவன் இந்த தன்னேய்ப்பில் சிக்கி விடுவதில்லை.
அவனுக்குத் தெரிகிறது...அப்படிப்பட்ட செயலை “சரி” என்று சொல்கின்ற அதே சமயம் அவன் மனம் அதைத் தவறு என்று சொல்லுகிறதென்று.
அதனால் தான் மனம் தவறு என்று நினைக்கும் ஒன்றை உதடுகள் சரி என்று சொல்ல அவன் எப்போதும் அனுமதிப்பதில்லை