vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, January 27, 2017

வைதீஸ்வரன் கதைகள் - இந்திரா பார்த்தசாரதி

    வைதீஸ்வரன் கதைகள்
(இந்திரா பார்த்தசாரதி)

வாசகனுடன் கருத்துப் பகிர்தலுக்காக அவனுடன் நேரடியாக நிகழ்த்தும் உரை யாடல் என்பதால், சிறுகதைகள், பரிசோதனை என்ற பெயரில்அவனைக் குழப்பிவிடாமல் கதை சொல்வது என்பதைத்தான் முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும்கதைக்கரு எப்படி வேண்டு மானாலும் இருக்கலாம்அந்நிகழ்வை படைப்பாளி எப்படித் தன் அநுபவத்துக்கேற்ப உள்வாங்கிக் கொண்டுதன் அநுபவத்தைப் 
பகிர்கிறான் என்பதுதான் முக்கியம்.

அண்மையில் கவிதா பப்ளிகேஷன் வெளியிட்டிருக்கும் 
வைதீஸ்வரன் கதைகள்’ இதற்கு ஒரு நல்ல சான்று.

வைதீஸ்வரன் ஒர் அருமையான நவீனக் கவிஞர்செல்லப்பாவின் எழுத்துவின் மூலம் கவிஞராக அடையாளம் காட்டப்பட்டவர்.
அதனால்தான் அவருடைய பெரும்பான்மையான சிறுகதைகளில் ஒரு கவிஞனின் பார்வை ‘பளிச்சென்று ஒளிர்கிறது.

இத்தொகுதியில் இருக்கும் கதைகளில் பெரும்பான்மையானவை தன்மை ஒருமை நிலையிலிருந்து எழுதப்பட்டிருப்பதால்படிக்கும் போது நண்பர் வைதீஸவரனுடன் நேரடியாக உரையாடிக் கொண்டி ருப்பதுபோல் ஓர் அநுபவம் எனக்கு ஏற்பட்டது. எழுத்தாளர் வைதீஸ்வ ரனுக்கும் இதுதான் உட்கோளாக இருக்க வேண்டுமென்று நினைக்கி றேன்.

சுயசரிதையைச் சொல்வது போல்ஆசிரியருக்குக் குழந்தைப் பருவத்தி லிருந்து பல்வேறு பருவங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய பல்வகைப்பட்ட அநுபவங்களைதுலாக்கோல் தீர்ப்பாக எந்த விமர்ச னத்தையும்முன் வைக்காமல்எழுதப் பட்டிருக்கும் கதைகள் இவை.

நம்புவதா ,நம்பாமலிருப்பதா’ என்ற ஒரு மனக்குழப்பம் மனிதனுக்கு இயல்பாக உண்டுஆனால், நம் நம்பிக்கையிமையைப் புறக்கணித்து விட்டுசில நிகழ்வுகளைப் பார்க்கும்போதுஅவை சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன

ஆங்கிலக் கவிஞர் காலரிட்ஜ் இந்த இலக்கிய உத்தியைக் கையாண்டு கிரிஸ்டாபல்’, ‘குப்ளாக் கான்’  போன்ற கவிதைகளை எழுதியிருக்கி றார்புதுமைப்பித்தன் எழுதியுள்ள  ‘காஞனையும் இவ்வகைப் படைப்பு தான்வைதீஸ்வரனின்விஸ்வாம்பரம்’, ‘’கனவில் கனவு’, போன்ற கதைகளைப் படிக்கும்போது இவ்வாறு தோன்றியது. இவ்வாறு நடந்திருக்குமா என்ற சந்தேகத்துக்கும்சந்தேகமிமைக்கும் இடையே ஊசலாடும் மன நிலை.

இந்நிலையில் பல தத்துவார்த்தமான் கேள்விகள் பிறக்கின்றனஎது நிஜம்எது தோற்றம்? இக்கேள்வியும்இவர் கதை ஒன்றில் வருகிறது. ‘ஆலிஸ் இன் தெ ஒண்டர்லாந்தில்’ ஆலிஸ் கேட்பாள்: ‘நான் கனவு காண்கின்றேனாஅல்லது நானே யாரோயொருவர் காணும் கனவில் வரும் கதாபாத்திரமா?’ என்றுதாத்தா அந்த ‘ விஸ்வாம்பரம்’ கதையைச் சொல்லும்போதுஅவ்வாறு நடந்திருக்கக் கூடியதுதான்அந்தக் கதையின் இன்றிமையாத தர்க்கம் என்று நமக்குப் படுகிறது. அவ்வாறு நம்ப வைப்பதுதான் கலைஞனின் ஆற்றல்.

தமர் உகந்த உருவம் அவன் உருவம்’ என்று திருவாய்மொழி கூறுவது போல்களிமண்ணை எப்படிப் பிசைந்தாலும் அவர் பிள்ளையார்தாம். ‘சிருஷ்டி’ என்ற கதையில் அச்சிறுவனின் தந்தை சிற்பியாக ஆக முயன்றுதத்துவ ஞானியாக ஏற்றம் பெற்றுஉண்மை உருவத்தில் இல்லை உள்ளத்தில் இருக்கிறது என்பதை உணர்கிறார்..

வைதீஸ்வரன் கவிஞர் மட்டுமன்றுநல்ல ஓவியர்அந்த அநுபவத்தில் விளைந்த சில நல்ல சிறுகதைகளும் இத்தொகுதியில் இடம்பெற்றிருக் கின்றன.

வைதீஸ்வரன் என்ற கலைஞனைப் பல்வேறு பரிமாணங்களில் அறிவதற்கு இத்தொகுதி உதவும்.




Sunday, January 22, 2017

கவிதைக்கு மொழி ஒரு விசைப்பலகை தான் -

கவிதைக்கு  மொழி  ஒரு  விசைப்பலகை தான்
------------------------------------------------------------------------------


நான்  இவர்  கவிதைகளை  ஆங்கில மொழி பெயர்ப்பில்  தான்  கண்டேன்.
இவர்  பெயர்  
என். கோபி.  
தெலுங்குக்  கவிஞர்.  
அடிக்கடி வாசிக்கத்  தூண்டும்  வரிகளாக  தோன்றுகின்றன.

தமிழ் மொழிபெயர்ப்பு :      வைதீஸ்வரன்




தாயாரின் முந்தானைக்குள்  பதுங்குவது போல்
துன்பங்களின் போது
நான் கவிதைக்குள்  புதைந்து  போகிறேன்.


          ***********


அவள்  மரணம் 
நொடியில்  நிகழ்ந்தது.
மரணம்  இந்த   நொடியில்
எங்கும்  நிகழுகிறது


          ***********


காலண்டரை   தின்று  கொழித்த
காலத்துக்கு
இயக்கம்  மட்டும்  தான்  உண்டு
இலக்குகள்  இல்லை!


        **************


வியர்வை  எறும்புகள்
எத்தனை  தட்டினாலும்
விலகுவதில்லை.


   *****************
அதோ  அந்தப் பையன்
மீண்டும்  நம் குழந்தைப்  பருவத்துக்குள்
பந்தை  எறிகிறான்.


    *********    

.

Friday, January 6, 2017


அத்வைதம்



                    அத்வைதம்
                      ****************
         வைதீஸ்வரன்


சந்தோஷத்தோடு  வருத்தம்
சர்க்கரையாய்  கலந்திருக்கிறது.
வெளிச்சம்  எப்போதும்
இருட்டின்  அளவுகோல்.
காற்றுக்குள்  தூங்கும் தீக்கங்குகளின்
ஆழ்ந்த  தியானம் .
சிகரங்களைத்  தாங்கிக்  கொண்டிருக்கிறது
பள்ளத்தாக்குகளின்  ஆழங்கள்.
வெவேறான  நானும்  நீயும்
ஒன்றான  தருணம்
வெறுப்பும் அன்பும்
உருத்தெரியாமல்
கட்டிப் பிடித்துக்  கொள்கிறது.
அற்புதம்  என்று வாய்திறந்த  கணமே
அது  இத்தனை  இயல்பா  என்று
விழிக்கும்  கேள்விக்குள்
ஏற்கனவே பதில்  திரண்டு  கொண்டிருக்கிறது.