Elie Wiesel
வாழ்க்கை மிக அதிர்ச்சிகரமான ஒன்று இவரது குடும்பம் ஹிடலரால் கடத்தப் பட்டு சித்ரவதை முகாமுக்கு இழுத்து செல்லப் பட்ட போது தாய் வழியிலேயே இறந்து விடுகிறாள். தந்தை சுடப் படுவதை பார்க்கிறார் ய்யுத முகாமில் அவர் பட்ட வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அங்கிருந்து தப்பித்தது நம்பமுடியாத ஒரு நிகழ்வு. மனித உரிமைகள் விடுதலை சார்பாக இவர் எழுதிய எழுத்துக்களுக்கு நோபெல் பரிசு பெற்றார், எண்பது வயது தாண்டி உயிர் வாழ்ந்தார் அவர் எழுதிய இந்த கவிதை மனதின் ஓலங்களை வெளிப்படுத்துவதை உணரலாம்
Never shall I forget that night
the first night in the camp
which has turned my life into
one long night
seven times cursed seven times sealed
Never shall I forget that smoke
Never shall I forget the little faces of
children
whose bodies I saw turned into wreaths
Of smoke
beneath a silent blue sky
Never shall I forget those flames
which consumed my faith for ever
Never shall I forget those nocturnal silence
which deprived me for all eternity of the
desire to live.
never shall I forget those moments
which murdered my God and my soul
and turned my dreams to dust
Never shall I forget these things
even if I am condemned to live
as long as God himself
Never..
Elie Wiesel
The Jew who survived the holocoust
and became an eminent writer and
winner of Nobel Prize
*********
என் வாழ்க்கையை நீண்ட இருட்டாக மாற்றிய
அந்தக் கிடங்கின் முதல் இரவை
ஏழுமுறை சபிக்கப்பட்ட
ஏழுமுறை புதைக்கப்பட்ட
அந்தக் கொடும் இரவை
என்னால் மறக்கவே முடியாது..
ஒரு போதும்.
இருண்ட கருநீலவெளியில்
புகைச்சுருள்மாலைகளாய்களாய்
வெந்து மிதந்த
சின்னக் குழந்தைகளின்
பிஞ்சு முகங்களை
கனவிலும் மறக்க இயலாது
என் நம்பிக்கைகளை நிரந்தரமாக
கருக்கிய அந்தத் தீப் பிழம்பை
எனது ஊழிக்கால உயிராசையை
அடியோடு சுட்டெரித்த அந்தக்
கொடூர இரவின் மௌனத்தை
என்னால் எவ்விதம் மறக்க இயலும்?
என் கடவுளையும் ஆன்மாவையும்
கொலை செய்த அந்தக் கணங்களை
என் கனவுகளைக் கழிவுநீராக்கிய
அந்தக் கணங்களை நான் ஒருக்காலும்
நினைப்பிலிருந்து நீக்க முடியாது.
கடவுளைப் போலவே நிரந்தரம் வாழ
நான் சபிக்கப்பட்டாலும்
எப்படி நான் இத்துயரை
அழித்து விட முடியும்?
மொ பெ வைதீஸ்வரன்
No comments:
Post a Comment