vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, May 19, 2018

பட்டுப் பூச்சி நினைவுகள் வைதீஸ்வரன்


பட்டுப் பூச்சி நினைவுகள்

வைதீஸ்வரன்

தீராநதி மே 2018


 

பட்டுப் பூச்சிகள் என் வாழ்வுக் காலத்தின் படைப்புத் தருணங்களை மிகவும் அற்புத
மாக பாதித்திருக்கின்றனஎன் மனவெளியில் அவைகள் பறந்த போதெல்லாம் அது 
எனக்கு மிகவும் அர்த்தமுள்ள கவித்துவமான நினைவுகளைத் தூவி விட்டுப் பறந்து போயிருக்கின்றன.

1970ல் வெளி வந்த உதய நிழல் தொகுப்பில் தான் இந்தப் பட்டுப் பூச்சிகள் முதல் 
முதலாகப் பறக்கத் தொடங்கின.

கொடியில் மலரும் பட்டுப் பூச்சி
கைப்பிடி நழுவிக்
காற்றில் பறக்கும் மலராச்சு! “

**
தூரிகையில்
பட்டுப் பூச்சிகளை வரைந்து கொண்டிருந்தேன்
அதில் ஒன்று பறந்து போயிற்று!...

**************

இந்த வரிகள் எனக்கும் வாசகர்களுக்கும் மிகப் பிடித்த வரிகள்இது ஒரு குழந்தை
யின் எளிமையான திறந்த மனத்துடன் ஒரு நிகழ்வைப் பார்த்து அதன் இயல்பான 
பாதிப்பில் வியந்து பாடும் மொழியாக வெளிப்பட்டுள்ளதுஒரு மலர் பூச்சியாகத் தோன்றுவதும் மறுகணம் பூச்சி மலராக மாறி விந்தைப் படுத்துவதும் ஒரு ஸ்வார
ஸ்யமான சலனம்!

இந்த பிரபஞ்சத்தின் காட்சிகள் எதுவும் நிரந்தரமான பொருண்மையுள்ளதல்ல!..
அவை எல்லாமே சார்புள்ள நம் பார்வையின் காட்சி மயக்கம் தான் என்கிறது நமது 
அத்வைத சித்தாந்தம்.

இதே போல் ஒரு மேற்கத்திய தத்துவஞானி பட்டுப் பூச்சியைப் போல் கனவு கண்டது நானாஅல்லது என்னைப் போல் கனவு கண்டது பட்டுப் பூச்சியாஎன்று கனவுக்கும் நனவுக்கும் உள்ள வித்யாசம் எவ்வளவு சார்புள்ளது என்று ஒரு கருத்தை அழகாக சொல்லியிருப்பார்..

*****************

பல வருஷங்களுக்கு முன் என் வீட்டின் கொல்லைப்புறத்தில் அழகான தோட்டம் இருந்ததுஇப்போது வீடுகளுக்கு கொல்லைப் புறமே இருப்பதில்லைஅங்கே பல 
விதமான பூச்செடிகளும் கொடிகளும் அழகாக செழித்துப் பரவிக் கிடந்தன.
காலை நேரங்களில் வண்ண வண்ணப் பூக்கள் விரிந்து மலர்ந்து கண்களைக் 
குதூகலிக்கும் வேளைகளில் காற்றெங்கும் சுகந்தமான மணத்தைத் தூவிக் 
கொண்டிருக்கும். மிகுந்த பாசத்துடன் ஒரு தாய் தன் பூமிப் பெண்ணை அலங்க
ரித்துப் பார்க்கும் பரிவை நான் அங்கே உணர்வதுண்டு.

இந்த சூழலை ஆனந்தமாக ரஸித்துப் பறந்து விளையாடுவதற்கு பட்டுப் பூச்சிக
ளுக்கு எப்போதுமே ஒரு கொண்டாட்டம்.தான் .. ஏற்கனவே அலங்காரப் பந்தலாக காட்சியளித்த தோட்டத்தில் வண்ணச் சிறகுகள் படபடக்க மேலும் கீழுமாக பறந்து விளையாடும்போது பூந்தோட்டம் மேலும் உயிர்த்துடிப்புள்ளதாக ,காட்சி அளிக்கும்இவைகளை வண்ணத்துப் பூச்சிகள் என்று மேலும் பொருத்தமாக 
இப்போது அழைக்கிறோம்.

இப்படி ஒரு ரம்மியமான காலையில் ஒரு நாள் நான் தோட்டத்தை பார்த்துக் 
கொண்டிருக்கும் போது என் ஆறு வயதுப்பேத்தி அங்கே விளையாட ஓடி வந்தாள்.

அந்தப் பட்டுப்பூச்சிகள் மேலும் கீழுமாக வளைந்து பறப்பதைக் கண்டவுடன் பேத்திக்கு ரொம்பக் குஷியாகி விட்டதுஅவள் சுற்றி சுற்றி ஓடி ஓடி அந்தப் பட்டுப் பூச்சிகளை 
துரத்தித் துரத்தி தொட்டுப் பார்க்க முயன்றாள்அவளுக்கு அதைக் கையில் பிடிக்க வேண்டுமென்று ஒரு ஆசை.

பட்டுப் பூச்சிகள் இவள் கைக்கு பிடிபடாமல் ஒவ்வொரு முறையும் தப்பித்துக் 
கொண்டே இருந்தனகாற்றில் மேலும் கீழுமாக பறந்து வளைந்து அவள் ஆர்வத்தை 
ண்டிக் கொண்டே இருந்தது போல் தோன்றியது.சில கணங்களில் என் பேத்தி அதை அநேகமாக பிடித்து விடும் நெருக்கத்தில் வந்து தப்பித்துக் கொண்டனஎன் பேத்தி கும்மாளமாக சிரித்துக் கொண்டு உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.இதைப் பார்க்கும் போது எனக்கு சற்று பதைப்பாக இருந்தது.


நான் சொன்னேன் குழந்தை.......வேண்டாம்...வேண்டாம்....அதைப் பிடிக்காதே
அது பறக்கட்டும்.....ஏன் அதைப் பிடிக்கணும்னு நெனைக்கிறே? “

“ இல்லே தாத்தா...அது பறக்கறதைப் பாத்தா பிடிக்கணும்னு ஆசையா இருக்கு...” 
பேத்தி ஓடிக் கொண்டே பேசினாள்

“ அப்படி ஏன் ஆசைப் படறே!...அதன் இறகு பிஞ்சா அதுக்கு எவ்வளவு வேதனையா 
இருக்கும் தெரியுமாகால்களை ஒடிப்பது போல் அதற்கு வலிக்கும்விட்டு விடு...”

என் பேத்தி சற்று நேரம் சும்மா இருந்தாள்அந்தப் பட்டுப் பூச்சிகள் மேலும் மேலும் அவளிடமே பறந்து அவளை சீண்டிக்கொண்டிருந்தனஅவள் மீண்டும் அவைக
ளைத் துரத்திப் பிடிக்க ஓடினாள்.

நான் சற்று உரக்கமாக சொன்னேன்...

வேண்டாம்மா..........வேண்டாம்....”

அவளுக்கு அது பிடிக்கவில்லை...

“ எனக்கு அது ஆசையா இருக்கு தாத்தா...” என்றாள் மீண்டும்

“ ஏன் அது உனக்கு ஆசையா இருக்கு?...”

அவள் சற்று தலையை சொறிந்து கொண்டாள். “ ஆசையா இருக்கு தாத்தா...
அது பறக்கறதைப் பாத்தா என்னமோ ஆசையா இருக்கு,,,”

“ ஏன்அது பாட்டுக்கு பறக்கட்டுமே! “

“ இல்லே....அது பறக்கறதைப் பாத்தா பொறாமையா இருக்கு.. எனக்கும் அது 
போல பறக்கணுன்னு...ஆசையா இருக்கு...” என்றாள்

“ கொழந்தே....அப்படிப் பாத்தா..இந்த ஒலகத்துலே நீ பொறாமைப்படறத்து 
ஏகப்பட்ட ஆசையான விஷயங்கள் இருக்குஅதுக்காக நீ அவைகளை துன்
புறுத்தி அழிக்கணும்னு நெனைக்கப் படாது...அந்த மாதிரி ஆசை தப்பான 
ஆசை..” என்றேன்

அந்தக் குழந்தையின் பிஞ்சு மனசுக்கு என் வயதான உபதேசங்கள் வெற்று 
வார்த்தைகளாகத் தோன்றி இருக்கும்.

“ இது சும்மா விளையாட்டுக்குத் தான் தாத்தா! “ என்றாள்

“ சரி.. சரி..அப்படியே விளையாடு...ஆனா இந்த விளையாட்டுலே நீ எப்பவும் 
தோக்கற வரைக்கும் இது நல்ல வெளையாட்டு..” என்று சொல்லி விட்டு 
நகர்ந்தேன். ஆனால் அவள் விளையாட்டு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

அவள் பட்டுப் பூச்சிகளை பிடிப்பது போல் துரத்துவதும் அவைகள் இவளுக்கு 
ஆசை காட்டி நெருங்கிப் பின் பிடி படாமல் தப்பிப்பதும் நிகழ்ந்து கொண்டே தான் இருந்ததுஇது ஒரு தீராத விளையாட்டு.!

ஒரு வேளை அந்த பிரஞ்சு தத்துவஞாநி சொன்னது போல் நான் இந்த நிகழ்வின் 
ஒரு பாதியைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேனோ? இந்த அழகான காலைப் 
பொழுதில் அந்தப் பட்டுப் பூச்சிகளும் என் பேத்தியுடன் விளையாடுவதைத் தான் விரும்புகின்றன போலும்!

***************
இந்த நிகழ்ச்சி மனதில் ஆழப் புதைந்து சில வருஷங்கள் ஆன பிறகு நான் குழந்தை
களுக்காக ஒரு பாட்டு எழுதினேன்அப்போது நான்ப்ருஹத்வனி என்கிற சங்கீத 
மொழி ஆராய்ச்சி மையத்தில் சில பங்களிப்புகள் செய்து கொண்டிருந்தேன் பள்ளி
களில் சின்னக் குழந்தைகள் பாடுவதற்காக "பட்டுப் பூச்சிகள் பற்றி ஓரு பாட்டு -
எழுதினேன்----------

பட்டுப் பூச்சித் தோழியே!
பக்கம் வந்து சிறகடீ!
தொட்டுப் பார்க்க ஆசையே!
தோளில் வந்து சிறகடீ!

வண்ணப் பூவின் இதழ்களால்
உன்னை செய்ததாரடீ!!
பண்ணில் ஏழுசுரங்கள் போல்
பறக்கும் கீதம் நீயடீ!
ஓடி...ஓடி....மலர்களின்
மனதில் அன்பைத் தூவினாய்!
பூமி நிறையப் பூக்களால்
நந்தவனங்கள் ஆக்கினாய்!...
உன்னைப் போலப் பறக்கவே
எனக்கும் ஆசை நெஞ்சிலே!
சிறகிரண்டு தருவையோ?
பறக்கச் சொல்லித் தருவையோ? [ பட்டுப் பூச்சி }

**
இந்தப் பாட்டுக்கு இசைப்பள்ளியில் மிக அழகாக இசையமைத்து பட்டுப் பூச்சிகள் 
போலக் குழந்தைகள் பட்டாடைகளில் சுற்றி சுற்றி வந்து மேடையில் ஆடிக் காட்ட
வும் செய்தார்கள்இது போல் என்னுடைய இன்னும் சில பாடல்களையும் தயா
ரித்து குழந்தைப் பாடல் நிகழ்வு ஒன்று நடத்தினார்கள்நிகழ்வுக்கு திரு லால்குடி 
ஜயராமன் அவர்கள் வந்திருந்து பாராட்டிப் பேசினார்கள்.

ஆனால் அன்று இந்த சந்தர்ப்பத்தில் நடந்த வேறு ஒரு சந்திப்புத் தான் என்னை 
வெகு நாட்களுக்கு யோசிப்பில் ஆழ்த்திய ஒரு விஷயம்.

அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் கிளம்பத் தயாரானபோது நிகழ்ச்சியில் பங்கேற்ற 
ஒரு சிறுமி என்னிடம் ஓடி வந்தாள்மிகவும் புத்திசாலியாகத் தெரிந்தாள்.
“uncle...Uncle....” என்று ஆங்கிலத்தில் அழைத்தாள்நான் அந்த சிறுமியைப் 
பார்த்தேன் கான்வெண்டில் படிக்கிற பெண்ணாகத் தெரிந்தது.

“ அங்கிள்.....எனக்கு ஒரு சந்தேகம்....கேட்கட்டுமா? “ .ஆங்கிலத்தில் தான் 
கேட்டாள்.

“ என்ன?.. என்ன சந்தேகம்? “ என்றேன்.

“ அங்கிள்..... பட்டுப் பூச்சித் தோழியே.!! ..என்று எப்படி உடனே எழுதினீர்கள்?” 
என்று கேட்டாள்.

“ ஏன்?...தோட்டத்தில் பட்டுப்பூச்சியைப் பார்த்தேன்...எழுதினேன்.." என்றேன்

“ ஏன்....நீங்கள் பார்த்த அந்தப் பட்டுபூச்சி.. ஒரு ஆணாக இருக்கக் கூடாதுபட்டுப் 
பூச்சித் தோழனே! “ என்று ஏன் பாட நினைப்பதில்லை! “ என்று ஒரு படாரென்று 
ஒரு கேள்வி கேட்டாள்.

ஒரு கணம் எனக்கு அவள் விஸ்வரூபமாகத் தெரிந்தாள்.

எப்படி இந்த சிறுமிக்குள் இப்படி ஒரு வித்யாசமான ஆனால் அடிப்படையான 
அதிச்சியான கேள்வி முளைத்தது!!

நான் சபாஷ்!...என்றேன்.

"” எனக்கு ஏன் அப்படித் தோன்றாமல் போய் விட்டதுநான் இனிமேல் அது பற்றி 
யோசிக்க வேண்டும்நன்றி.” என்றேன்.

அவள் என் பதிலுக்குக் காத்திராமல் சிரித்துக் கொண்டு ஓடி விட்டாள்!.

மென்மையாக நளினமாக வண்ணங்களுடன் ஜிலுஜிலுப்பாக இயற்கையில் 
எந்த அம்சத்தைப் பார்த்தாலும் அவற்றைப் பெண்ணாக நினைத்துப் போற்றிப் பாடுவது 
தான் நமக்கு மரபாகி வந்திருக்கிறது.

ஆனால் இந்த நவீன யுகத்துப் பெண் அந்த மரபு பார்வையை சற்றே மாற்றிப் பார்க்கத் தூண்டுகிறாள்.அவளுக்குத் தன்னை ஒரு மென்மையான பட்டுப்பூச்சியாக நினைத்துக் கொள்வதில் ஏனோ பெருமிதமில்லை!!

ஆணுக்கு நிகரான அங்கீகாரத்தையும் கடமைகளையும் ஏற்க வேண்டுமென்ற 
தூண்டலை பெண்மை என்பது வெறும் அலங்காரமும் வண்ணங்களும் மட்டுமல்ல அவளுக்குள் ஆணுக்கு சமமான திறனும் பலமும் இருக்கிறது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது இன்றைய காலச் சூழல்.

முந்தைய தலைமுறைகளைப் போல இல்லாமல் ஆண் பெண் இருவருமே தொழிலுக்குப் போகும் இன்றைய குடும்ப அமைப்பில் தாய்க்கும் தந்தைக்கும் உள்ள வித்யாசமான குணாம்சங்களின் பாதிப்பு குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லையோ என்று எண்ணிக் கொண்டேன்.

அந்தப் பெண்ணின் கேள்வி என்னை வேறுவிதமாகவும் தூண்டி விட்டது.
நான் உடனே ஒரு பெரிய புத்தக சாலையின் விஞ்ஞானப் பகுதிக்கு போய் அங்கே 
பட்டுப் பூச்சிகளின் உயிரியல் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்..............

“ ஒரு பட்டுபூச்சியின் உருவ அமைப்பைப் பார்த்தவுடன் அது ஆணா பெண்ணா...
என்று எப்படி அறிந்து கொள்வது என்கிற அறிவியல் விவரங்களை ! “”