vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, June 29, 2017

ASHOKAMITRAN’S LETTER on reading my Poetry collection நகரச் சுவர்கள் 8-1-1995

   
ASHOKAMITRAN’S  LETTER
on  reading  my   Poetry  collection  நகரச் சுவர்கள்  8-1-1995

 கடந்த  அறுபது  ஆண்டுகளாக   எனக்கு  அன்னியோன்னியமானவராக   இருந்திருக்கிறார்   அசோகமித்திரன்.   அவ்வப்போது அவர் அபிப்ராயங் களை  நறுக்குத்   தெறித்த மாதிரி   தபாலில் எழுதி   எனக்கு  அனுப்பி  விடுவார்.  அந்தக் கடிதங்களுள்    இங்கே  நான் வெளியிட விரும்பும் ஒரு  கடிதம்   எனக்கு முக்கியமானதாக    பகிர்ந்து கொள்ளக் கூடியதாகத்   தோன்றுகிறது.   

   அசோகமித்திரன்  அநேகமாக  அவருடைய  பேட்டிகள்  எல்லாவற்றிலும்   கவிதைகள்  மீது   தனக்கு  நம்பிக்கையில்லை   என்று  தான்  சொல்லிக் கொண்டிருந்தார்.  ஆனால்  கீழே  காணும்  கடிதம்  கவிதைகளை  அவர்  ஆழ்ந்து வாசித்ததோடல்லாமல்   அதை மொழிபெயர்க்கவும்   தூண்டப் பட்டிருக்கிறார்   என்று  அறிய முடிகிறது.

                                                                                  *******************

ASHOKAMITRAN’S  LETTER
on  reading  my   Poetry  collection  நகரச் சுவர்கள்  8-1-1995

Dear  Friend    I didn’t    want  to  open  the  book  in  your  presence  and  just  for  the occasion  make  surface  remarks.

 It  is  a  truly  sumptuous  book  of  great  delivery   and  artistry.  You  would have  noticed  yourself   that  as  years  passed   by, you  had   become  to  depend   less   on  metaphors   and  imagery  and  more  on the  brief  description  of  a  situation.

 When  I  write  this  I am  thinking  of  your poem   மாறாட்டம் “ [games  on  the  playground}

Again  the reliance  is  not  in  the  language  of complicated  vocabularies   but  plain  description  of  a  situation   in  a  combination  of  things.   Rajagopal  has  done  a  fine  introduction.  It  is  very  difficult  to  write introduction  to  your  kind  of  Poetry   where  the  strength  is  the  transference  of  your   vision  to  the  readers  and  not  an  intellectual  understanding.

  When  I  read  your  நாய்மை*  I thought  of  NVR  { Your  Brother  Rajamani}    You  know  or  may  not  know  I  in  the  confidence  born  out  of  my  ignorance  collaborated  with  him  in  translating  it!!

  I  used  your  நகரச் சுவர்கள்   in  an article   mentioning  the  poem  and  the poet.

       With  Best  Wishes                     Ashokamitran   8-1-95

*நாய்மை”  in  English  published  in   Poetry  Anthology  ICCR
 .     


Saturday, June 10, 2017

ஒரு பகிர்தல் வைதீஸ்வரன்

      ஒரு பகிர்தல்      

வைதீஸ்வரன்



 இன்றைய  பத்திரிகைகளில்  கவிதைகள்  கணிசமாக பார்க்கக் கிடைக்கின்றனபல  கவிதைகள்  பிரமாதமான  முயற்சியாக மிகவும் சுதந்திரமான  வீச்சுடன்  வெளிப்படுகின்றனநான்  படித்து ரஸித்த பல கவிதைகளில்  இந்தக் கவிதையை  உங்களுடன் பகிர்ந்து  கொள்ள  விரும்புகிறேன் . 
இந்தக் கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்



      இருத்தலின் அழகு  
கார்த்திக் திலகன்

 நீயும் நானும் அமர்ந்திருக்கிறோம்
என் பக்கமாக  இருக்கும்  மௌனத்தை
உன் பக்கமாக  நகர்த்தி வைக்கிறேன்.
நீயோ சிரித்துக்  கொண்டே
என் பக்கமாக அதை நகர்த்தி வைக்கிறாய்
மொழியின் விளையாட்டை விட
மௌனத்தின் விளையாட்டு
நமக்கு  பிடித்து  விடுகிறது.
தேவதச்சன் வருகிறான்
நமக்காக ஒரு ஜன்னலை  இழைத்துக் கொடுக்கிறான்
மரத்தையும்  கம்பிகளையும்  கொண்டு
துண்டு துண்டு வானத்தை  அதில் பொருத்துகிறான்
இருத்தலின்  அழகை  இன்மையின் அழகு பூரணமாக்கி விடுகிறது
கவிதை ஒன்றை எழுதி உன்னிடம் நீட்டுகிறேன்
நீ கவிதையை எடுத்துக் கொள்ளுகிறாய்.
நான் வெற்றுக் காகிதத்தை  திரும்ப  எடுத்து  செல்கிறேன்
இருத்தலின் பாரத்தை
இன்மை சமப்படுத்தி விட்டது.
லாவோட்சு சொல்லுகிறான்
பாண்டத்தின் பலன் அதன்  உட்குழிந்த வெற்றுப் பகுதியில் தான் இருக்கிறது   நண்பா!!”
நானந்த  பாண்டத்தை எடுத்துக் கொள்ளுகிறேன்
நீயதில்  நிரம்பியிருக்கும்  வெற்றுப் பகுதியை  எடுத்துக் கொள்ளேன்!!


                               *விகடன் தடம்