vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, December 8, 2015

மாலை இருட்டில் மறைந்து போகுமா சாலை விதிகள்??

மாலை இருட்டில் 

மறைந்து போகுமா  

சாலை விதிகள்??


வைதீஸ்வரன்
                                   ---------------------------------------------------

இன்றைய  சூழலில் ரபரப்பாக  போய்க்  கொண்டிருக் கும்  போக்கு வரத்துகளும்  ஜன நெரிசலும்  நிறைந்த  ’ நாற்சந்திகளில் தான்  அரசாங்கமதுக் கடைகள்.. வியா பாரம்  செய்கின்றன.

  மாலை நேரங்களில் அந்தக்  கடைகளின்  முன்னால் மிக  ஒழுங்காவரிசையாக  நிற்கின்றன இருசக்கர வாகனங்கள்.  வாகனத்தை  அழகாக நிறுத்திவிட்டுஅத் தனை  பேரும்  மதுக்  கடைக்குள்  நுழைந்து  ரம்மியமாகப் மயங்கும்   மாலைப்  பொழுதைக் கழித்துக்  கொண் டிருக்கிறார்கள்.

மாதத்தில்  எல்லாநாட்களிலும்  மாலை  நேரங்களில் இந்தக்  
கடைகளில்  இப் படிப்பட்ட  கூட்டம்  அலை மோதுகி றது.  பொழுதை கழித்து  விட்டு அவரவர்கள்  வீடு  திரும்புவதற்குள்  இருட்டி விடலாம்.

  அங்கங்கே   சாலை  முனைகளில்  போக்குவரத்து  விதிகளையும்  எச்சரிக்கைகளையும்   கொட்டை எழுத்தில் விளம்பரப்படுத்தும்   போர்டுகளைப்  பார்க்கும்போது  உயர்தர ஹாஸ்யமாக  எனக்குத்  தோன்றுவதுண்டு.  

·      குடித்து விட்டு  வாகனங்களை  ஓட்டாதீர்கள்!
·      குடிபோதையில்  வாகனங்களை  ஓட்டினால்  
உரிமங்கள் ரத்து  செய்யப் படும்..

     இந்த  எச்சரிக்கைகள்  யாருக்காக...எந்த  உபயோகத்துக்காக  
தொங்கிக்  கொண்டிருக்கின்றன

  மாலை நேரத்தில்  இந்தக் கடைகளிலிருந்து  வெளியே  வருபவர்கள்  எவரும்  குடிக்காமல்  தான்  வருகிறார்களா?  தங்கள்  
வாகனங்களை  ஓட்டிக்கொண்டு  போகும்  இவர்கள்  எல்லாம்  போதையில்லாமல்  தெளிவாகத் தான்  ஓட்டுகிறார்களா? !!!
  
இவர்களில்  எத்தனைபேர்  சுயநினைவுடன்  இருந்தாலும் 
இருட்டில் கவனமுடன் வாகனம் ஓட்ட முடிந்தவர்களாக இருப்பார்களா?

  இவர்கள் ஓட்டும்  வாகனங்களால்  வீதி மக்களுக்கு  எவ் வளவு  ஆபத்துக்கள்  நேரும் வாய்ப்புகள்  இருக்கின்றன?  பல சமயம் விபத்து நேர்ந்தபின் தான்  இவர்கள்  குடித்து விட்டு வண்டி  ஓட்டியதற்காக  தண்டிக்கப் படுகிறார்களா?  

அல்லது மாமூலாக தப்பித்து விடுகிறார்களா

சாலையோரங்களில்  இயங்கும் மதுக் கடைகளும் சாலை முனைகளில்  தொங்கும் போக்குவரத்து விதிகளும்  பொது வாக  மாலை இருட்டில்  முரண் இல்லாமல்   சகஜமாகி சமரச மாகி  விடுகின்றனவா?..!!
                           


.


No comments:

Post a Comment