vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, December 22, 2015

சார்வாகன் கதைகள் - வைதீஸ்வரன்


சார்வாகன்   கதைகள்
வைதீஸ்வரன்



1960க்குப்பின் தமிழ்  சிறுகதைகளின் போக்கு ஒரு புதிய திருப்ப
த்தை  தேர்ந்து  கொள்வதைப்  பார்க்கமுடிகிறது. மொழி நடை
யிலும் வெளிப் பாட்டு  உத்தியிலும்மேலோட்டமான  கருப்பொருள்
களை தவிர்ப்பதிலும்  வாழ்க்கையின் நிகழ்வுகளை  ஆழமாக  நுண்மையான கலைப்பிரக்ஞையுடன்  கண்டறியும் முயற்சிகளை
யும்  அறுபதுக்குப் பிறகுவந்த கதைகள் பிரதிபலிக்கின்றன.

சம்பவங்களை  உள்மனத்தின் ஞாபகங்களோடு உரசிப்பார்த்து 
மிகைஉணர்ச்சி தவிர்த்த புதிய  பரிமாணங்களை ஏற்படுத்துவதை  பார்க்கமுடிந்தது.

கிருஷ்ணமூர்த்தி  சா கந்தசாமி  ராமகிருஷ்ணன் கூட்டணியில் 
வெளிவந்த கோணல்கள் சிறுகதைகளின்  சுதந்திரமான  போக்கின்  சாத்தியங் களை  தெரியப்படுத்திய  ஒரு தொகுப்பு.

 அப்போது   எழுதியவர்களுக்கு  மேலைநாட்டு இலக்கியத்தை  
வாசித்து  அதிலிருந்து  சில பார்வைகளை  தெரிந்துகொள்ள 
ஆவலும் தேர்ச்சியும் இருந்தது. புதிய அணுகுமுறையை  படைப்
பில் அறிமுகப்படுத்தினாலும்  அவர்கள்  தங்களுடைய  மரபு வாசனைகளையும் தங்களை  நேரடியாக  பாதிக்கும்   சமூகச் சூழல்களையும்  உயிர்ப்பான  பிரச்னைகளையும்   தங்கள் எழுத்து
க்கு ஆதாரமாகக்  கொள்வதில் கவனமாக  இருந்தார்கள்.

இதேகாலகட்டத்தில்   மார்க்சீய  சிந்தனைகளின்  அப்பட்டமான  விளம்பரங்களாக   கதைகளை  ஒரு நிமித்தமான  பிரசார  சாதன
மாக  பயன்படுத்திக்கொண்ட எழுத்தாளர்களும்  அப்போது  ஒரு  
லட்சிய வேகத்துடன்  இயங்கிக்கொண்டிருந்தார்கள்.

 இந்தக் கால கட்டத்தில்   அறிமுகமான  சார்வாகன் ஒரு  முக்கிய
மான சிறந்த மறுமலர்ச்சி  எழுத்தாளராக  தமிழ் சிறுகதைப் போக்கு களுக்கு  பங்களித்திருக்கிறார்.   வினோதமாக தற்செயலாகவோ  அல்லது  ஒரு சாதகமான சூழ்நிலையினாலோ இவருடைய அநேக  கதைகள்  முற்போக்கு இதழான தாமரைப் பத்திரிக்கையில் பிரசுர
மாகி  இருக்கின்றன.  இந்த  ஒரு  அடையாளத்தால் அந்தக்  காலத்
தில் பலர்  இவரை முற்போக்கு எழுத்தாளர்  என்று  பொதுவாக தப்பர்த்தம்  செய்துகொண்டிருக்கக்  கூடும்.  பாராட்டும் பெற்றிருக் கக்கூடும். ஆனால்  இவரோ எந்த வட்டத்திலும் சேராமல் தனித்தே  இயங்கியிருக்கிறார்.

சார்வாகன்  தன்னை  முற்போக்கு எழுத்தாளனாக  சொல்லிக்கொண்
டதில்லை... சொல்லப்போனால்  அவர்  தன்னை  எழுத்தாளனா
கவே சொல்லிக்கொள்ள விரும்பாதவராக, 1975 வரை நிறையவே  எழுதிக்கொண்டுவந்திருக்கிறார்.

நீங்கள்  அரிசி  என்றால் அது  உங்களுக்கு  அரிசி....... கல்  என்
றால்   கல்.... என்ற  விடுதலையான  இலக்கியக் கோட்பாடுதான்  அவருடையது. என்று  இப்போதுஅவருடைய  அருமையான  கணிச
மான  சிறுகதைத்  தொகுப் பின் முன்னுரையை வாசிக்கும்போது  விளங்குகிறது. எந்த இஸமும்  எந்த சோதனை  உத்திகளும்  அவரு
க்குள்  ஆர்வமோ அக்கறையோ ஏற்படுத்தியதில்லை   என்று   சொல்லுகிறார்.

அவருடைய  எழுத்து  அடிப்படையில்  ஸ்வாரஸ்யமானது.  நேர்மை
யான பேச்சுத் தொனி  கொண்டது. வாழ்க்கையை  முழுக்க ரஸிப்பது. தான் வாழ்க் கையில் கண்டது  கேட்டது  சந்தித்தது  அத்தனையையும்  ஒரு  கதை என்கிற வட்டத்திற்கு  சட்டத்திற்கு  அப்பாலான வெளியில் அன்னியோன்யமான மொழியில் ஆர  அமர  நிதானமாக சொல்லுகிறார் சார்வாகன்.

இளம்வயதில் நிறைய  நல்ல  தமிழ் நூல்களை வாசித்த  பயிற்சியும் ஒரு  நுண்மையான  மருத்துவரின்  பரந்த மனித அனுபவங்களும்  அவருக்கு மிகவும்  உறுதுணையாக இருக்கின்றன. சாதாரணமான  யதார்த்தமான   மனிதர்களின்  வேதனைகளை  மட்டும்சொல்லும்  கதைகள்  இல்லை  இவை.புராணங்களின்  பின்புலத்தில் இன்றைய மனித  குணங்களை  பொருத்திப்பார்த்து நகைப் பதிலும்   வாழ்வு  மரணம்  இதற்கிடையில்  மனிதப் பிரக்ஞை  படும்  அவஸ்தைகளை   மீமெய்யியல் {Surrealistic}பான்மையில் சித்தரிப்பதுவும், சில சாதா
ரண மனிதர்களின்  வியக்கத்தக்க  உன்னத  குணங்களை  விவரிப் பதற்காக  கதையின் வடிவச் சிதறலையும்  பொருட்படுத்தாமல்  
எழுதிக்கொண்டே போகும் அவருடைய  வித்யாசமான  வெளிப்
பாடும்   இவர்  கதைகளின்  பொதுவான  அடையாளங்கள்.

 நற்றிணைப்  பதிப்பகம்  “சார்வாகன்  கதைகள்“  என்று  542  பக்கங் களுக்கு இவர் சிறுகதைகளின்  மொத்தத்  தொகுப்பை அருமையாக  கொண்டு வந்திருக்கிறார் கள்.  இந்தப்பதிப்பில் சுமார்  41  நீளமான   கதைகளும் மூன்று பெரிய குறுநாவல்களும்  இருக்கின்றன. 
இந்தப்பெரியதொகுப்பை குறுகிய கால அவகாசத்துக்குள்  வய
தின்  தடங்கல்களையும் மீறி  விலாவாரியாகப்படித்து சொல்வது 
எனக்கு அசாத்தியமான  காரியம்.

1975க்கு  மேல் அவர்  எதுவும்  எழுதவில்லை என்று  குறைப்பட்டுக் கொள்கி றார்.... அவர்  எழுதாதது  இழப்பல்ல!!!  நான் எள்ளலாக  
இதைச்  சொல்லவில்லை.  இதுவரை அவர் எழுதிய சில கதைகளி லேயே  எனக்குக் கிடைத்த அனுபவம்  நிறைவாகவே இருக்கிறது. 
இவர் கதைகள்  ரயில்வண்டி மாதிரி.வேடிக்கைக்காக சொன்னா
லும்  அது  வேடிக்கையாக  இருக்கவேண்டிய அவசியமில்லை. 

வாசகன்  கதைகளின்  எந்தப் பக்கத்திலும்  ஏறிக்கொண்டு  சவாரி செய்யலாம்! ஜன்னல்வழியாக ஓடும் காடுகளையும்மலைகளையும்  
மனிதர்ளையும் பிராணிகளையும் வாழ்க்கையின்  வெவ்வேறு 
கோணங்களில்  வெவ்வேறு  பார்வையில்  தெரியும்  மனித  அவஸ்தைகளயும்  அனுபவித்துக் கொண்டே  பயணிக்கலாம். உங்களுக்கு அலுப்புத்தட்டும் போது  கீழே  இறங்கி விடலாம்.
எந்தப்  பகுதியை  வாசித்தாலும் உங்களுக்கு  சின்னசின்ன  
முன்னும் பின்னும் சாராத அனுபவங்கள்முழுமையாகக் கிட்ட
லாம்.  உயர்ந்த  கலைப்படைப்புக்கு  இதுவும்  ஒரு  லட்சணம்   
என்று  சொல்லுவார்கள்.

நான்  ஆதிமூலம்  ஓவியம்  ஒன்றை  அவர் வீட்டில்  பார்த்துக் கொண்டிருக்கும் போது  அவர்  சொன்னார், ‘ருஓவியம்  சிறப்
பாக  அமைந்திருக்கிறது  என்பதற்கு ஒரு  அளவுகோல் உண்டு.  
அந்த  ஓவியத்தை  சின்ன சின்னக்  கட்டங்களாக பிரித்துப்  பார்த்
தாலும்அந்தக் கட்டங்களுக்குள்  அது  ஒரு  முழுமையான வடிவ
மாகத்  தோன்றும்  என்று... சார்வாகன்  கதையைப்படிக்கும்போது  
எனக்கு  அந்த வார்த்தை  நினைவுக்கு  வந்தது.

வழக்கமான  ஆரம்பம்   தொடர்ச்சிமுடிவு  என்கிற  சம்பிரதாய
த்தை  இயல்பாக  உடைக்கக்கூடிய  கதைகளில் வாசிப்பு அனுப
வம் பெற  நீளம்  நமக்கு அவசிய மில்லை.  அனுபவத்தின்  ஆழம் குறுகிய  வாசிப்பிலேயே   மனதில்  ஆழ்ந்த விழிப்புண
ர்வை  ஏற்படுத்தக்  கூடும்.

சார்வாகன்  அவர்களின்   முன்னுரை  மிக  ஸ்வாரஸ்யமானது  
அதில்  ஒரு      நிகழ்ச்சியைச்  சொல்லியிருக்கிறார்:

எழுத்தாளர்  ஸாலிவாஹனன்   இறந்த  செய்தியை  தவறாகப் புரிந்துகொண்டவல்லிக்கண்ணன் சார்வாகனுக்கு  நீண்ட  இரங்கல் கட்டுரை எழுதி  எங்கோ பிரசுரமும்  செய்திருக்கிறார்.  சில வருஷங்களுக்குப் பிறகு  இதை அறிந்து கொண்ட சார்வாகன்  வல்லிக்கண்ணனிடம்  இதை  விசாரித்தபோது அவர் வெட் கப்பட்டு மௌனமாக விலகிப் போய்விட்டாராம்  சார்வாகன்  அந்த  அஞ்
சலிக் கட்டுரையை  இன்னும்  தேடிக்  கொண்டிருக்கிறார்.  அது  கிடைக்காமலே  போகட்டும் என்று  நாம்  பிரார்த்திக்கலாம்!

இது  மாதிரி  சில வருஷங்களுக்குமுன் ஒரு  பிரபல ஆங்கிலப் பத்திரிகை யில்  லா.ச.ரா  மறைந்த  செய்தியை  பிரசுரித்தபோது  எழுத்தாளர்  லா.சு.ரா என்று அச்சடித்து  அவர்  புகைப்படத்தையும்  போட்டுவிட்டார்கள்.  லா.சு. ரங்க ராஜனுக்கு   அந்த  தினம்  மறக்க  முடியாத   அனுதாப அதிச்சியைக்  கொடுத்தி ருக்கக் கூடும்.

 நான்  வாசித்த  கதைகளின்  விவரங்களையெல்லாம்  இங்கே  விலாவரியாக எடுத்து சொல்வது  உங்களுக்கு  எந்த  வித்த்திலும்   உதவியாக இருக்காது. ஒருவேளை நீங்கள்  வாசித்துப்பெறுகின்ற  அனுபவத்துக்கு  முட்டுக்கட்டை யாக  இருந்தாலும் இருக்கலாம்.

இந்தத்  தொகுப்பில்   மிகவும்  அருமையான  குறுநாவல் ஒன்று  இருக்கிறது. பெயர்  அமர பண்டிதன்.  “ஒரு  பரியாரிக்குள்  மறைந்து கிடக்கும்  உன்னத மான  அபூர்வமான  மனிதனை  மிக  எளிமையாக  மிக நெகிழ்ச்சியுடன்  விவரிக்கிறது. வாழ்க்கையில் எளிய  மக்களை  அலட்சியம்  செய்வதால்  சமூகம்  எவ்வளவு  தூரம்  தன்னையே  அழித்துக்கொள்கிறது  என்ற  அதிர்ச்சியான செய்தியை இயல்பாகச்  சொல்லுகிறது  இந்தக்  கதை.

 இவைகளைக் கதைகள் என்று சாதாரணமாக ஒதுக்கிவிட 
முடியாது.  அதுதான்  சார்வாகனின்   கதைகள். 




No comments:

Post a Comment