vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, January 29, 2016

எனது அபிமான ஓவியர் K.G.SUBRAHMANYAM

எனது  அபிமான  ஓவியர்  K.G.SubramanyaN

வைதீஸ்வரன்




கே. ஜி. சுப்ரமண்யம்  [90]  
 மிக அருமையான 
உலகறிந்த ஓவியர்.  

கலைப் பேராசிரியர்.  

பிற  பாதிப்புகளை  சரியாக  புரிந்து கொண்டு தனக்கே உரித்தான  ஒரு  
ஓவிய பாணியை உருவாக்கிக் கொண்டவர்.

நம் 
நெடுங்காலத் தொன்மங்களைப் 
பற்றிய கதைகளையும் 
கற்பனைகளையும் 
குழந்தையின்  பார்வையுடன் "நூதனமான  எளிமையுடன்” 
சித்திரங்களாக  
சிருஷ்டித்தவர்.

கவிஞரும்  கூட.  

சாந்தினிகேதனில்  பயின்றவர்.

அவருடைய  இந்த  
ஆங்கிலக்  கவிதையை  
மொழிபெயர்க்க 
இன்னும் முயற்சி  
செய்துகொண்டிருக்கிறேன்.

A   POEM    BY   K  G  SUBRAMANYAN
{A  RENOWNED  ARTISTE}AGE  90

A wave of  joy  runs  through  the  waking  earth
The sunlight sings;... within the wind-blown  trees
And flowering  shrubs  there is  explosive  mirth
White butterflies float  in  the swirling  breeze
Like  airborne  smiles. Bird  calls  fills the air
Do they call you by Name? At least you feel they  do
Come join  the choir. And climb the  sky’s steep  stair
And beat up the celebration the whole world  through
But a sudden  wail  cuts  through  the festive  air
Someone in  pain? A suffering  beast  or  a  child?
This  tears  down  the tapestry; holes  it  with  fear
Muddies the  mind makes your thoughts  run  wild
The way things are we are born to leave bet ween
The good and bad in  this  oddly  mixed up scene    

K.G.Subramanyan        

 K.G. Subramanyan is amongthe few artists who have explored the possibilities of modern art from a different perspective, giving new dimensions to the human figure by making them appear more as characters from various myths and traditional narratives, populating a composition quite the contrary. As an artist he is extraordinarily versatile, cherishing the facility to work in diverse media, sizes, and techniques over a stylistic conformity to a single medium, genre, size, technique, and manner of visualization.

A prolific writer, scholar, teacher and art historian, Subramanyan uses his in-depth knowledge of various artistic traditions to create fantastical images of wit and eroticism that are universal in their appeal, yet coupled with iconic symbols drawn from Indian legends and folklore. Subramanyan has time and again aimed at blurring the boundaries between art and the artisan. The artist has also dabbled in glass painting and toy making, even weaving, which is generally considered ‘artisanal’. Even in his written works, the exploration of art as a language or means of communication is a recurring theme. Subramanyan has also illustrated as well as authored fiction for children.

Born on 15 February, 1924, in Kerala, Subramanyan studied under the tutelage of Benode Behari Mukherjee, Nandalal Bose and Ramkinkar Baij at Santiniketan. He graduated from Kala Bhavan, Visva Bharati University, there in 1948 after receiving his Bachelor’s Degree in Economics from the Presidency College in Chennai. In 1955, he received a British Council Research Fellowship to the Slade School of Art at the University of London. Since his graduation, Subramanyan’s work has been exhibited in over fifty solo shows, the most recent including those presented by Seagull Foundation for the Arts in collaboration with Nandan Gallery at Kala Bhavana, Kolkata, in 2009; ‘The Painted Platters’ at the Guild Art Gallery, Mumbai, in 2007; and ‘The Magic of Making’ at the Seagull Arts and Media Resource Centre, Kolkata, and Rabindra Bhavan, Lalit Kala Akademi, New Delhi, also in 2007. 




             


Friday, January 22, 2016

க்ளாவரின் இரண்டு பக்கம்

க்ளாவரின் 
இரண்டு பக்கம்

வைதீஸ்வரன்.
னக்கு  ஐந்து வயதான
போது  நான்  திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர வில்லை. வீட்டுக்கு எதிராகவே இருந்தகூடத்
துப் பள்ளிக்கூடத்தில் 
சேர்த்துவிட்டார் என் 
அப்பா. 

அது உண்மையில் 
பள்ளிக்கூடம் 
இல்லை.  ஒரு  ஓட்டு
வீட்டின் முன் தாழ் 
வாரத்து மண்தரை
யில் நீளப் பலகை
யைப்போட்டு எங்
களை உட்கார வைத்து எதிரே 
ஒரு குச்சு நாற்கா
லியும் ஒரு காலொ
டிந்த மேஜையும்  
போட்டுக் 
கொண்டு 
ஆசிரியர் 
உட்கார்ந்
திருப்பார். 
அவருக்குப் 
பின்னால் 
கரியை 
அரைத்துப்பூசிஒரு நீளமானகரும்பலகை
சுவற்றில் ஏதோ ஒரு கோணத்தில் சாய்ந்து கொண்டிருக்கும்.

எங்கள்வாத்தியார் குள்ளம். ஒல்லியாக நெற்றியில் மெல்
லிய நாமம் போட்டுக்கொண்டுஇருப்பார்..குரல் பெண் ணைப் போல் இருக்கும்.

வகுப்புக்கு வந்தவுடன் எங்களை கடவுள் வணக்கம் பாடச் 
சொல்லிவிட்டு  கரும்பலகையில்  ஒண்ணாம் வாய்ப்பாடு  எழுதுவார்.அவர் எப்போதும்  கணக்கு வாய்ப்பாடுதான்
எழுதியதால் அவர் கணக்கு வாத்தியார் என்றுதான்  இப்
போது ஞாபகம்.

அவர்  குரலின் காரணமாக அவர் அநேகமாக எதையும் 
எழுதித்தான் கற்பித்துக்கொண்டிருந்தார்  என்று  நினைக் கிறேன்.அதைப்பார்த்து ஸ்லேட்டில் தப்பில்லாமல் எழுத
வேண்டும்  யாரும்  பேசக்கூடாதுஎன்று  சொல்லிவிட்டு 
சற்று நேரம் கண்ணை மூடிக்கொள்வார்.



திடீரென்று கண்விழித்து அவர் பையிலிருந்து கலர்கலரான  
நீள நீளமான  சாக்குத் துண்டுகளை [Chalk piece }   மேஜையின் மேல்எடுத்து வைப்பார்.  ஒரு  பேப்பரில்  சுற்றி வைத்திருந்த கூர்மையான முனையில் தட்டையான ஊசி ஒன்றை எடுப்பார்.   சாக்பீஸைக் கையில் எடுத்து லாகவமாக அதை விரல்களில் 
பிடித்துக்கொண்டு ஊசியால் அதை பல அழுத்தத்தில் வருடு
வார்.

தினந்தோறும் அவர் செய்யும் இந்தக் கைநேர்த்தியைப் பார்ப்
பதற்காகவே  நான்  வாய்ப்பாட்டை அவசரமாக  எழுதிவிட்டு
அவரையே கவனித்துக்கொண்டிருப்பேன்.

 விரல்களால்  திருப்பித்திருப்பி ஊசிமுனையால் மிக நுண்மை
யாக சாக்குக்கட்டியை செதுக்கிக்கொண்டே வருவார். அதன் 
மேல் படிந்த சாக்குத்தூளை அடிக்கொருமுறை ஊதி ஊதி 
அப்புறபடுத்திக்கொண்டேயிருப்பார்..

அந்த சாக்குக்  கட்டிக்குள் இருந்து ஒரு உருவம் வெளிப்படும். 
இன்று அது என்னவாக இருக்கும் என்று நானும் மற்ற மாண
ர்ளும் ஆவலாயோசித்துக்கொண்டிருப்போம். மெல்ல
மெல்லஒரு  தலையும் அபிநயம் பிடிக்கும் கைகளும்  அழகாக 
வளைந்து நிற்கும் கால்களும் உருவாகும்..தலை குனிந்தோ 
சாய்ந்தோ ஒரு பார்வையின் கோணத்தைக்  காட்டும்.

 வாத்தியாருக்கு  நாங்கள்  பார்த்துக் கொண்டிருப்பது எதுவும் 
தெரியாது. அவருக்கு  சுற்றியிருக்கும் உலகமே தெரியாது. வீடு 
உலகம் சுற்றியிருக்கும் நாங்கள் பள்ளிக்கூடம் எதுவும்அவர் ப்ரக்ஞையில் இருக்காது. 

ஒரு சிருஷ்டியை சேதமில்லாமல் அழகாக வெளியில் எடுக்
கும் மருத்துவச்சியின்  கவனிப்புடன்  அவர் செதுக்கிக்கொண்டிரு
ப்பார்.

செதுக்கி முடிந்தவுடன் சற்றுமுன் அவர்கையிலிருந்த சாக்குத் 
துண்டுமுற்றிலும் புதிய பிறவி எடுத்திருக்கும். பாவாடையுடன் 
நிற்கும் பெண்ணாக இருக்கும். முண்டாசு கட்டின கிழவனாக 
நிற்கும். நீண்டு வளைந்த தென்னைமரமாக இருக்கும்.  
கண்ணுக்கு பழைய சாக்குக்கட்டி  தெரியாது !

வீட்டில் என்  தூக்கத்தில்கூட அந்த வாத்தியாரின்  மென்மை
யான விரல்களும்  அதன் நாசூக்கான பரபரப்பில் வெளிப்படும் 
ஆச்சரியமான உருவங்களும்தான் மீண்டும்  மீண்டும் என்  
நினைவில் வந்துகொண்டே இருக்கும்.

ஒரு சிறந்த சிற்பக்கலைஞராக மிளிரவேண்டிய இந்தக் குள்ள
மான உருவம் ஒரு  ஓட்டுக் கட்டிடத்தில் ஒண்ணாங் கிளாஸ்  
வாத்யாராகி உட்கார்ந்துகொண்டு அற்புதமான சிருஷ்டிகளை 
யார் கண்ணிலும் படாமல் படைத்துப் பின் உடைத்துப்போடும் மனப்பக்குவம் எப்படி நேர்ந்தது

அல்லது, இதுதான் அவருக்கு விதிக்கப்பட்டதாஅல்லது 
அதுதான் அவர் தனக்கே இன்னதென்று தெரியாமல் உள்ளும்
புறமும் ஒன்றிப்போய் பூரித்துப்போகும் நிறைவான கலை 
அனுபவமா

அல்லது இது ஒரு  இயல்பாக அவருக்கு வாய்த்த ஆன்மீகப்
பயிற்சியா?  

அல்லது  யாரும் காணா பாலையில் தானே பூத்து தானே 
வாடி உதிர்ந்து போகும் சில பூக்களின் அற்ப வாழ்வைப் 
போன்றதா அவருடைய  அபூர்வமான  கலைத் திறன்?.

தன்னுடைய கையிலிருக்கும்  சாக்குத் துண்டு ஒரு நிறை
வான உருவம் பெற்றவுடன் அவர் முகத்தில் ஒரு  மகிழ்ச்சி
யும் சிரிப்பும் தோன்றும்.  இரண்டு முறை அதை திருப்பித் 
திருப்பிப் பார்ப்பார்.

 நான் அந்த நேரத்துக்காக  காத்துக் கொண்டிருப்பேன்.  
ஸார்........” என்று கையை நீட்டுவேன்.  அவர் என்னைப்  
பார்ப்பார்....வாய்ப் பாடெல்லாம்  ஒழுங்கா எளுதினயா?..”  “எழுதிட்டேன் ஸார்...”  

அவர் என் வார்த்தையை நம்புவார்.  கையிலிருந்த  அந்த  
அற்புதமா பொக்கிஷத்தை  என்னிடம் சந்தோஷமாக 
கொடுத்துவிடுவார்.. 

நான் அதை தலையில்வைத்துக் கூத்தாடிக்கொண்டு  வீட்டு
க்கு வந்து என்  வாத்தியார் செய்த பொம்மையை எல்லாரிட
மும் பெருமையுடன்காட்டி அவர் என்னிடம் காட்டிய விசே
ப் பரிவையும் எல்லோரிட சொல்லி சந்தோஷப்படுவேன்.

அப்போது ஒரு  ஆசிரியராக அவர்  எதையும் சொல்லிக்கொடு
க்வில்லையோ  என்று தோன்றலாம்.  பாடம் நடத்தும்  நேரத்
தில் அந்த ஆசிரியர் இந்த மாதிரி கைவேலை செய்துகொண்டி
ருப்பதை மூத்த ஆசிரியர் என்று யாராவது   பார்க்க நேர்ந்தால்  
அவரைக் கடிந்து கொள்ளக்கூடும்...

ஆனால். அவர் இந்த மாதிரி   இல்லாமல்  எங்களுக்கு  வாய்ப்
பாடும் கணக்கும் மட்டுமே  கற்றுத்தரும்  வழக்கமான வாத்தி
யாராக இருந்திருந்தால் நாங்கள் ஒரு நிறைவான,  என்றும்  
நினைவில் நிற்கக்கூடிய  நெகிழ்ச்சியான  கலைஅனுபவத்
தின் பாதிப்பை அந்தச் சின்ன வயதில் இழந்திருப்போம்.


 தற்கு அடுத்த வருஷம்  
நான் அந்தக் கூடத்துப் 
பள்ளிக் கூடத்தின் 
உள்கூடத்துக்கு மாற்றப்
பட்டேன். ஒண்ணாம் வகுப்பிலிருந்து இரண்
டாம் வகுப்புக்கு உயர்வு.

இந்த  வகுப்பில்  கணக்கு 
தமிழ் சொல்லிக் கொடுக்க 
ஒரு உபாத்தியாயரும்  மீதி  நேரத்துக்கு உபரி யாக  இன்
னொரு வாத்தியாரும்  வந்தா
ர்கள்.  அந்த  இன்னொரு  வாத்தியார்  டிராய்ங் மாஸ்
டர்  என்று சொல்லிக்கொண்
டார்கள்.  கறுத்த முகமும் அழுக்கான  சட்டை வேட்டி
யும் அணிந்துகொண்டு  
கையில் ஒரு  கசங்கிய பழுப்பேறிய புத்தகத்துடன் 
எப்போதும் காட்சியளிப்பார்  
அவர்.



அவர்  வகுப்புக்கு வந்தவுடன்  கரும்பலகையில்  செங்குத்
தாக ஒருகோடு இழுப்பார். அதில் க்ளாவர்  வடிவத்தின் ஒரு  
பாதியை  கோட்டுக்கு வலது பக்கம் வரைந்துவிட்டுஎங்களை 
அதே மாதிரி  ஸ்லேட்டில் வரைந்து  க்ளாவரின் உருவத்தை  
கோட்டுக்கு இடது பக்கமும் முழுமைப்படுத்த வேண்டு மென்று சொல்லுவார். அதோடு அவர் பாடம் முடிந்தது.  

பிறகு காலைத் தூக்கி  மேஜையில் வைத்துக் கொண்டு  
லேசாக ஆட்டிக்கொண்டவாறு கையிலிருந்த கசங்கல் 
புத்தகத்தைப் படிக்கத் தொடங்குவார்.

படிக்கப்படிக்க அவர் கண்கள் கிறங்கிப்போகும். பக்கங்
களைஅவர் புரட்டப் புரட்ட அவர்  கால்களின்  ஆட்டம்  விறு
விறுப்படையும். வாயோரம் ஈரம் கசியும். அடிக்கொருதரம் 
வேட்டியை சரிப்படுத்திக் கொள்வார்.

நாங்கள்  க்ளாவரை வரைவதைவிட அவர் காலாட்டத்தைப்  
பார்த்து ரஸிப்பதில்தான்  ஸ்வாரஸ்யம் கொள்வோம். 

அந்த  வருஷம் முடியும் வரை  அவரும் க்ளாவர் வடிவத்
தின் அரைப் பகுதியைத் தாண்டி வரையவில்லை, நாங்க
ளும் ஒரு தடவைகூட அதை  முழுதாக வரைந்து காட்ட
வில்லை. 

அன்று  எனக்கு க்ளாவர் வடிவத்தின் மேல் ஏற்பட்ட 
வெறுப்பும் ஒவ்வாமையும் பல வருஷங்களுக்கு 
மறையவேயில்லை.

இவர் எப்படி ஒரு டிராய்ங் மாஸ்டரா? என்று கேட்கத்
தோன்றாத வயதுஅப்போது...ஒருவேளை வேறுஎதற்கும் 
லாயக்கில்லாதவராக இருந்திருக்கலாம்!  
..   
                  *********************